புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2024

பொதுச்சபையின் அனுமதியின்றி மாவையை நீக்க முடியாது! [Friday 2024-12-27 16:00]

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

ஞானமுத்து சிறிநேசன் எம்.பி தெரிவிக்கையில்,

மாவை.சோ.சேனாதிராஜா மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்திய குழு உறுப்பினரையும் பதவி நீக்குவதற்கு பொதுச்சபையின் அனுமதி அவசியமாகும். ஆகவே பொதுச்சபையின் அனுமதியின்றி மாவை.சோ.சேனாதிராஜாவை கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது.

முன்பு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கி.துரைரெட்ணசிங்கம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தன்னிச்சையாக வழங்கினார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து அவரை பதவி விலக்க வேண்டும் என்று கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது, அவரைப் பதவி நீக்கம் செய்வதாக இருந்தால் கட்சியின் பொதுச்சபையின் அனுமதி தேவையென்றும் அவ்வாறு அனுமதியின்றி பதவி நீக்கினால் நீதிமன்றத்தினை நாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆகவே, துரைரெட்ணசிங்கம் விடயத்தின் பொதுச்சபையின் அனுமதி தேவையாக இருக்கின்றபோது மாவை.சோ.சேனாதிராஜாவின் விடயத்தில் அவ்விதமான அனுமதி தேவையில்லை என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும். ஆகவே மாவை.சேனாதிராஜாவை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் தலைமைப் பதவியில் நீடிப்பார் என்றார்.

ad

ad