பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.