புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு: 2015 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்த மொரீசியஸ்
இலங்கையில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்த மொரீசியஸ் நாடு எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது.
அடுத்த பொதுநலவாய நாடுகளின் மாநாடடை மொரீசியஸ் நடத்த வேண்டுமாயின், அந்த நாடுகள் கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா அறிவித்திருந்தாக மொரீசியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலம் சனல் 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற தனது முடிவு காரணமாக 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மொரீசியஸ் வெளிவிவகார அமைச்சர் அர்வின் பூலெல் கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மொரீசியஸ் எந்த நாடு குறித்து தீர்ப்பு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மொரீசியஸ் இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்துள்ளமை குறித்து எழுப்பிய கேள்வி பதிலளித்த பூலெல், தமது நாட்டின் சார்பின் பிரதிநிதியாக தான் இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ad

ad