புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

சென்னை அருகே புயல் சின்னம் தீவிரம்
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.



நேற்று சென்னை அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த அந்த புயல் சின்னம், தற்போது மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்காக நகர்த்து வருகிறது.
இந்த புயல் சின்னம் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக கடலில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனே திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. எனவே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
சென்னை, நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் புதுச்சேரி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.
புயல் சின்னம் தீவிரம் அடைத்து வருவதால் நாளை மாலை முதல் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை அளவு 25 சென்டிமீட்டர் வரை இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இரணியில் 9 செ.மீ., தக்கலை 8 செ.மீ., குமரிமுனை, தூத்துக்குடி, கழுகுமலையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று ராமநாத புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதநகர், திண்டுக்கல் மாவட்டங் களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad