புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

போலீசாரின் அடக்குமுறை : இலங்கைக்கு எதிராககுமரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் சந்தித்த கொடுமைகள்! 
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது. மீறி நடந்தால் காமன்வெல்த்கூட்டமைப்பில் இருந் து இந்தயா வெளியேற வேண்டும். இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து
தமிழக எம்.பி க் களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.


ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேசசமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம்முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் மாறன், பிரபாகரன் உள்ளிட்ட மாணவர்கள் போராட்டத்தை நடத்த தொடங்கினார்கள். இவர்களை போலீஸ் தாக்கிமருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. அதில், சில மாணவர்கள் நக்கீரனுக்காகபேசினார்கள்.
எங்கள் முப்பாட்டன் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர்மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி ரகசியமாக கைப்பற்றி மாணவர்மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை துவங்கி னோம். இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர். தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் எங்களை தாக்க துவங்கினார்கள். இதில், ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பின் விலகி சென்றனர்.
அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். வந்த அதிகாரிகள் பெயரளவிற்கு கூட ஏன் இந்த போராட்டம் உங்களின் கோரிக்கைகள் என்னவென்று கேட்கவில்லை! வந்த உடனே உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம் மரியாதையாக தங்களுடன் வரும்படி மிரட்டினார்கள்.


நாங்கள் போராட்டத்தை கைவிடவில்லை, தொடர்ந்து அவர்களிடம் வாக்கு  வாதத்தில் ஈடுபட்டோம் நாங்கள் எதற்கும் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்ட  அவர்களிடம் எங்களை கைது செய்ய போதுமான ஆட்கள் இல்லை.   இதனால் அவர்கள் மற்ற அதிகாரிகளை வரவழைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதை சாதகமாக உணர்ந்து கொண்ட நாங்கள் கோஷமிடுவதை நிறுத்திவிட்டு அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடம் ஈழத்தில் இலங்கை மற்றும் இந்தியா சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனஅழிப்பை தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுத்துரைத்து கொண்டிருந்தோம், சுற்றுலா
பயணிகளும் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆர்வமாக கேட்டு உணர்ந்து கொண்டு உங்களுடைய போராட்டத்திற்கு எங்களுடைய ஆதரவு உண்டு. தங்களது மாநிலங்களில் உள்ள தங்களது நண்பர்களிடமும் இந்த அவலங்களை எடுத்துரைப்பதாக சொல்லி முக இறுக்கத்துடன் கடந்து சென்றனர்.
இதை கண்டு சினமுற்ற காவல் (?) துறை அங்குள்ள தனியார் காவலாளிகளுடன்  சேர்ந்து ஏவல் துறையாக மாறி எங்களுடன் தள்ளுமுள்ளு செய்ய தொடங்கினர், மாணவர்கள் இருவரை பிடித்து இழுத்து சென்று அவர்களை மண்டபத்தின் கீழ்பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தினர். அவர்களை விடுவிக்க சென்ற 4 மாணவர்களையும் பிடித்து வைத்துகொண்டு அவர்களிடம் உங்களை விட வேண்டுமானால் போராட்டத்தை மற்றவர்கள் கைவிட்டுவிட்டு கைதுக்கு உடன்பட்டு தங்களுடன் வர வேண்டும் என்றும், மீறினால் உங்களை பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்றும் மிரட்டினர்.
இதையெல்லாம் எதிர்கொண்டு மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தையும்,பரப்புரையையும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தொடர்ந்தோம். சரியாக 3.30 மணியளவில் தனி படகு மூலம் ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் அணியினர் வந்து சேர்ந்தனர். வந்தவர்களுக்கு முன்பே என்ன செய்ய வேண்டு மென்று அங்கு இருந்த காவல்துறை அதிகாரி தர்மலிங்கம் உத்தரவிட்டிருந்தார் போலும்.   வந்த உடனேயே ஆளுயுர லத்தி மற்றும் கட்டைகளை கொண்டு எங்களை அடித்து தனி படகு மூலம் கரைக்கு இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றினர். வாகனம்  கிளம்பியவுடன் அடிக்க துவங்கியவர்கள் மண்டபம் சென்ற பின்னும் விடவில்லை.


ஒரு ஒரு ஆளாக இறக்கிவிட்டு சுற்றி 6 பேர் நின்றுகொண்டு சரமாரியாக 
கட்டையால் அடித்து மண்டபத்திற் குள்ளே அனுப்பினார்கள் அனைவரையும்.  அடித்து உள்ளே இழுத்து சென்ற பின் கதவை மூடிவிட்டு,எங்களின் கைபேசிகள்  அனைத்தையும் வாங்கி ஒரு பையில் போட்டுக்கொண்டு சிங்களவனுக்கு சற்றும் குறையாமல் அடித்தனர். பிறகு அதனை ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால்  சிங்கள ராணுவத்திடம் சிக்கியதை போன்று உணர்ந்தோம்.
எங்களை மூன்று மூன்று பேராக வரிசையில் உக்கார வைத்து யார் யார்? சிறுநீர்  கழிக்க வேண்டுமோ இரண்டு இரண்டு பேராக வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு  போய் சிறுநீர் கழிக்கும் இடத்தினுள் ஒருவருக்கு இரண்டு பேர் என நான்கு பேர் அடித்து துன்புறுத்தினர். அதோடு இல்லாமல் அனைவரையும் உக்காரவைத்து  கண்ணைமூடிய நிலையில் 2நொடிகூட விடாமல் உட்க்காந்திருந்த எங்களின் மேல்  உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கினர்.
நாங்கள் எங்களின் தலையை காத்துக்கொள்ள சுருங்கி படுத்துகொண்டோம்.  அடிக்கும் பொழுது உங்களின் வேலையை எல்லாம் வேறு மாவட்டத்தில்  வைத்துகொள்ளுங்கள். இந்த இடத்திருக்கு வந்தீர்கள் என்றால் இது தான் நிலை என்று தொடர்ந்து தாக்கினர். அது மட்டும் இல்லாமல் யார் யாருக்கு தங்கை,அக்கா  இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டு அவர்களை அனைவரின் மத்தியிலும் மிக மிக தவறாக பேசினர். மாலை 6 மணிவரை நடக்க முடியாத அளவிற்கு அடித்து  அனைவரிடமும் முகவரி மற்றும் போட்டோக் களை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி கடற்கரை காவல்நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் "தர்மலிங்கம்" (Ph  + 91 94426 18847) தலைமையில் தான் எங்களுக்கு எதிரான இத்தனை  அடக்குமுறைகளும் , அநீதிகளும் நிகழ்த்தப்பட்டது.
மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதலை நடத்திய அனைத்து காவலர்களும் தங்களது சீருடையில் இருந்த பெயர் பட்டையை நீக்கி இருந்தது குறிப்பிடதக்கது.  கைதில் இருந்து மாலை விடுவிக்கப்பட்ட வர்கள் அடுத்தநாள் பரிட்சை இருந்ததால் அதே வலியுடன் அவர் அவர் ஊருக்கு அனுப்பிவைத்தோம்.
படுகாயமடைந்த நான்கு மாணவர்கள் அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான மருத்துவ சிகிச்சையும்  அளிக்கப்படவில்லை. எங்களை மருத்துவமனையில் இருந்து விடுவியுங்கள் என்று கேட்டதற்கு உங்கள் இஸ்டத்திற்கு எல்லாம் செய்ய முடியாது முன்று நான்கு நாட்கள் ஆகும் அதுவரை பொய் படுங்கள் என்றும் எங்களிடம் பிரச்னை செய்திர்கள் என்று புகார் கொடுப் போம் என்று மிரட்டினார்கள்.
எங்களுக்கான ஆதரவுகளும் தங்களது பிழைகளை அறிந்து கொண்ட காவல் துறைவிவேகானந்தர்  பாறையில் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒரு புகார் மனுவை வாங்கி வைத்து இருக்கின்றனர். மேலும் அங்கு இருக்கும் ஹிந்து அமைப்புகளிடம்  பேசி எங்களுக்கு எதிரான வேலைகளையும் அறிக்கைகளையும் தயார்படுத்தி உள்ளனர்’’ என்றனர்.

ad

ad