வியாழன், டிசம்பர் 12, 2013

வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்
"நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கின்றனர்": ஐங்கரநேசன்
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்:-
வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும்
மஹிந்தவின் அழைப்பு! நானும் பிள்ளையும் வேண்டாமா? அரசியலுக்கு போகலாம் என்கிறார் மனைவி! - குழப்பத்தில் முரளிதரன்!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்
யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளும் கட்சி சாரா உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்! இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் முன் பள்ளி  சிறப்பான முறையில் புனரமைப்பு செய்யப் பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது .இந்த  அரிய பணிகளை அ.சண்முகநாதன் என்னும் கண்ணாடி அவர்கள் முன்னின்று சீராக கவனித்து செய்து முடித்துள்ளார் . திறப்பு விழாவில் பாலசுப்பிரமணிய ஆலயக் குருக்கள்,ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் சமூக சேவகருமான சிவலிங்கம் .ஊடகவியலாளர் சதீபன் உட்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் (படங்கள் )