செவ்வாய், மார்ச் 10, 2015

வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு


வடக்கு மாகாணத்தில் இதுவரையில்  2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்
சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.ஆர்.ஏ.சாந்த குமார தெரிவித்துள்ளார்.
 
"வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்ய முடியும். ஒரு விவசாயியிடம் இருந்து 2 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படும்.'' என்று அவர் கூறியுள்ளார்.
 
"வடக்கு மாகாணத்தில் சிவப்பு நாடு, வெள்ளை நாடு என்ற நெல்வகைகள் ஒரு கிலோ 45 ரூபாவாகவும், சம்பா வகை நெல் ஒரு கிலோ 50 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படுகின்றது.'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
"நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பப்படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து மாவட்ட செயலரிடம் உறுதிப்படுத்தி நெல் மாதிரியையும் கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாகத் தரும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து நெல் கொள்வனவு செய்யப்படும்.'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"யாழ்.மாவட்டத்தில் புத்தூர், கொடிகாமம் கமநல சேவை நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதுவரை யாழ்.மாவட்டத்தில் இருந்து 197 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்துள்ளார்.