புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

கோத்தாவை காப்பாற்றும் ரணில்?


 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­வை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முயற்சித்த போதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனைத் தடுத்துள்ளார்.
 
அவரைக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குப் பதிலாக ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரணில் அறிவுறுத்தினார் இவ்வாறு கொழும்பு ரெலிக்கிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்­வை மூன்று நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நீதிமன்றத்தில் கோரஇருந்தனர். 
 
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த நடவடிக்கையைத் தடுத்துள்ளார். கோத்தபாய ராஜபக்­வை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வது அரசுக்கு புதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவரைக் காவலில் வைத்து விசாரணை செய்வதை விடுத்து, ஏனைய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.
 
அதையடுத்தே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கோத்தபாய ராஜபக்­ உட்பட 4 பேரது கடவுச் சீட்டுக்களையும் முடக்கி வைப்பதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad