புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

19 ஆவது திருத்தம்; இறுதிமுடிவு நாளை

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
உட்பட முக்கிய சில சரத்துகளடங்கிய அரசமைப் பின் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் நாளை இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது.
 
அமைச்சரவைக்கும் மேலான தொரு சபையாகக் கருதப்பட்டுவரும் தேசிய நிறை வேற்றுச் சபையின் வாராந்த கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 
 
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு, இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது.
 
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால் அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்ட வரைவு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் கூடிய அரசமைப்பு மறுசீரமைப்புக் குழுவும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
தேசிய நிறைவேற்றுச் சபையில் இதற்கு அனுமதி கிடைத்ததும், அது எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் அவசர சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
 
தேர்தல் முறைமையில் மாற்றம், அரசமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை இரத்துச் செய்தல் ஆகிய விடயங்களும் புதிய சட்டவரைவில் உள்ளடக்கப்படவுள்ளது. 17ஆவது அரசமைப்பின்படி, புதிய சில ஆணைக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. 
 
அத்துடன், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றிலிரண்டு உறுப்பினர்களின் அனுமதி அவசியம் என்ற விடயமும் 19ஆவது திருத்தச்சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய அரசமைப்பின்படி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது

ad

ad