3 மார்., 2017

டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு

கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

20 பேர் கொண்ட இந்த குழுவில் பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்சமுகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 10 நாட்கள் இந்த குழு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் இந்தியாவும் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்து புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்காக இந்த குழு இந்த விஜயங்களை மேற்கொள்கிறது.