புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2025

பிரான்சில் வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை! வெடித்தது மக்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com

பிரான்சில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும்
வகையில், இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்ய

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

www.pungudutivuswiss.com
செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும்
பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கும்! [Wednesday 2025-07-16 07:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கனடா செல்வதற்கு 80 இலட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்தவர் உயிரை மாய்த்தார்! [Wednesday 2025-07-16 07:00]

www.pungudutivuswiss.com


கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

“அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்” - ஓ.பி.எஸ் அதிரடி! [Tuesday 2025-07-15 07:00]

www.pungudutivuswiss.com

அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது.

அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது

100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை’ - துப்புரவு தொழிலாளி கொடுத்த புகாரால் பரபரப்பு! [Tuesday 2025-07-15 16:00]

www.pungudutivuswiss.com

100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவு- 9 மாதங்களுக்குப் பின் இளைஞனுக்கு பிணை! [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்

காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! Top News [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ad

ad