புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 1008 லிங்கங்களும் இடித்து தரைமட்டம்!
திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முருகன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (30). இவர்களுக்கு ரூபா (5),
கணவன் மனைவியாக 2 நாள் வாழ்ந்த காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த தோணிமுடி 3வது பிரிவை சேர்ந்த தர்மஜெயம் மகள் பரண்யாதேவி(18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பேஷன் டெக்னாலஜி முதலாண்டு படித்து வந்தார். 


மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு
கம்போடியா தலைநகர் நாம்பின்னில் பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க வந்த இரு தலைவர்களும் தனியே சந்தித்துப் பேசினர். தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங்கை ஒபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா 
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருவது குறித்து விவாதிப்பதற்காக இன்று (20.11.2012) காலை புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின்

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்;: உயிரிழப்பு 92 ஆக உயர்வு

இஸ்ரேல் தொடர்ச்சியாக 6வது நாளாகவும் காசா மீது நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் பல அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்றை தினத்தில் 92

உள்ளக விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னர் ஊடகங்களுக்கு கசிந்தது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்

ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு
அமெரிக்க கிராண்ட் பீரி -மெக்லரன்- மெர்சிடஸ் அணி வீரரான அவர் பந்தய தூரத்தை ஒரு மணி 35 நிமிடம் 55.209 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார்.
கார் பந்தய போட்டிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது. 'பார்முலா 1' கார் பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
19 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதா? என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பிரமுகரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியுமான மனீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது

பால்தாக்கரேவை விமர்வித்த பெண்கள் கைது! முதல்வருக்கு முன்னாள் நீதிபதி எச்சரிக்கை கடிதம்! 

சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில்

19 நவ., 2012


பால் தாகக்ரேவின் அஸ்தி கங்கையில் கலைப்பு
பால் தாகக்ரேவின் அஸ்தியை சேகரிக்கும் பணி காலையில் நடைபெற்றது. சேகரிக்கப்பட்டுள்ள அஸ்தி கங்கையில் கரைக்கப்படும் என்று பால் தாக்கரேவின் மகன் உத்தவ தாக்கரே கூறியுள்ளார்.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு: மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்: கலைஞர் பேட்டி


சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் 19.11.2012 திங்கள்கிழமை நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த முடிவு 


திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்,

இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது: டி.ஆர்.பாலு 

தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. நாடாளுன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில்,

ரங்கன ஹேரத் அபாரம்: முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபது-20, ஐந்து ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றது.
திர்க்கட்சித் தலைவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டதால் சபையில் சர்ச்சை
எதிர்க்கட்சித் தலைவர் மீதான டிரான் அலஸ் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் அதனைத் தொடர்ந்ததான எதிர்க்கட்சித் தலைவரின் விளக்கம் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கிய
தமிழ்நாடு அகதி முகாமில் 15 இலங்கை அகதிகளை காணவில்லை
தமிழ்நாடு – திருநெல்வெலி மாவட்டம் போகநல்லூர் பிரதேச முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 15 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 139 பேர் தங்கியிருந்ததாகவும்
பிரபாகரனின் மகனை கொல்வதற்கு எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை : அமைச்சர் டிலான்
பிரபாகரனின் மகனை படுகொலை செய்வதற்கான தேவை எமக்கு இருக்கவில்லை. அவரை நாம் கொல்லவும் இல்லை. ஆனால் அவர் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

மேற்குலக நாடுகள் கூறுவதைக் கேட்டு ஐ.நா. செயற்படுத்துகிறது :- இலங்கை ஆவேசம்
இலங்கை விவகாரங்களில் மேற்குலக நாடுகள் சொல்வதைக் கேட்டுத்தான் எப்போதும்  ஐ.நா செயற்பட்டு வருவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான ஒடுக்கு முறையை சுட்டிக்காட்டிய பால் தாக்கரே!
இந்திய சிவசேனா கட்சியின் அகில இந்தியத் தலைவர் பால் தாக்கரேயின் இறப்பு மக்களால் ஜீரனிக்க முடியாத அதிர்ச்சி இதனை ஈடு செய்யும் அளவுக்கு யாரிடமும் இருக்குமா என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே. அனைவருக்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.னாதிபதி புகழ் பாடும் டக்ளஸ் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் எம்பி ஒருவரைக் கிண்டலடித்த ஆளும் கட்சி உறுப்பினர்: குலுங்கிச் சிரித்தது பாராளுமன்றம்
2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆங்கில மொழியில் உரையாற்றினார்.

'109 தமிழ் யுவதிகளை முதன் முறையாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் வைபவம் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் கலாசாரத்துடன் நடந்த இந்த நிகழ்வுக்கு பெற்றோருடன் வந்த தமிழ் யுவதியை இராணுவ வீராங்கனை வரவேற்கிறார். 

13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்


13 சட்டத்திருத்தம் அர்த்தமற்றது என்பதனால் நாம் அதனை நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியமை, அவர்களின் இரட்டை தன்மை நிலைப்பாட்டை காட்டுவதாக
அதிர்வு இணையம் இப்படி எழுதி உள்ளது எது உண்மை?
விநாயகம் கைது உறுதிப்படுத்திய பிரான்சின் உளக உளவுத்துறை 
கேணல் பரிதியின் கொலை தொடர்பாக தாம் விநாயகம் என்னும் நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளதாக, பிரான்சின் உள்ளக உளவுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். லீவலோ பற்றிக் செடெக்ஸ்(DCRI, BP307, 92302 Levallois, Perret

விநாயகம் கைது செய்யப்படவில்லை! பிரென்சு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பில் விநாயகம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் எதுவித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்: இலங்கை பாதுகாப்பு அமைச்சு
ஐரோப்பியாவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சூழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் ஐ.நா. தன் கடமைகளைச் செய்ய தவறியது :- கருணாதிலக அமுனுகம
ஐ.நா.அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளக அறிக்கை குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 340/5
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடை பெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ரன் குவித்தது. புஜாரா இரட்டை சதமும் (206), ஷேவாக் சதமும் (117)
தி.மு.க. மட்டும் தான் பொதுபிரச்சினைக்கு ஐ.நா.வரை சென்றுள்ளது: டி.ஆர்.பாலு பெருமிதம்
மறைந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியண்ணனின் 16-வது ஆண்டு நினைவு நாள் தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர்


அரசு மரியாதையுடன் பால்தாக்கரே உடல் தகனம் 


பால்தாக்கரேவின் மறைவால் மும்பையில் கார், ஆட்டோக்கள் முற்றிலுமாக இயங்கவில்லை
86 வயதான சிவசேனா தலைவர் பால்தாக்கரே மும்பையில் 17.11.2012 மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பால்தாக்கரேயின் இறுதிச்சடங்கில் அத்வானி, சுஷ்மா, அம்பானி, சினிமா நட்சத்திரங்கள்
சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை சிவாஜி பூங்காவில் நடைபெறுகிறது. பால் தாக்கரேவின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்த மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ,அருண் ஜெட்லி ,மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ,தொழில் அதிபர் அம்பானி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி பூங்காவிற்கு வந்துள்ளனர், 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆஸி.யிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்
அவுஸ்திரேலியாவிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போலி ஏ.ரி.எம். அட்டைகள் மூலம் தொடரும் பண மோசடி : ரஷ்ய நாட்டவர் ஐவர் கைது
போலி எ.ரி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள எ.ரி.எம் இயந்திரங்களிலிருலிருந்து பணமெடுத்த 5 ரஷ்ய நாட்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்

18 நவ., 2012


பால்தாக்கரே இறுதி ஊர்வலம்



பால் தாக்கரே இறுதி ஊர்வலம்


கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24 சனிக்கிழமை பிரான்சில் !
கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்:
துப்பாக்கி திரைப்பட சரச்சை : தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என உலமா கட்சி தெரிவிப்பு
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக

17 நவ., 2012


ராஜீவ் காந்தியைக் கொல்லும்படி பிரபாகரன் எனக்கு கட்டளையிடவில்லை : தீபாவளி சிறப்பு பேட்டியில் கேபி
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்டு வந்து, தற்போது இலங்கை அரசுடன் கைகோர்த்து நடமாடும் ஐம்பத்தேழு வயது நிரம்பிய மயிலிட்டியைச் சேர்ந்த கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தீபாவளி சிறப்பு பேட்டியளித்திருந்தார்.

LATEST NEWS SWISS TIME 11.20
பால் தாக்கரே காலமானார்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் காலமானார். 86 வயதான பால்தாக்கரே கடந்த ஒரு மாதமாக உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.பால்தாக்கரேவின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

18.11.2012 காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 3 அளவில் பால்தாக்கரேவின்  உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர்

சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. 

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர்

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது. 
பால்தாக்கரே இன்று பகல் 3.33 மணிக்கு மரணம் அடைந்தார் .அவரது கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் .இதை ஒரு காரணமாக வைத்து வன்முறை விதைக்க முற்படாமல் அமைதி காக்க வேண்டும் .
இந்த செய்தியை தந்தி டிவி முதலில் சொன்னது

இலங்கை இராணுவம் என்று கூறி உலகில் பெருமைபடலாமாம்! 109 தமிழ் பெண்கள் மத்தியில் உரை

இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட பின்னர் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று இலங்கை இராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

109 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைப்பு: பாரதிபுரத்தில் நிகழ்வு

இலங்கை இராணுவத்துக்கு 109 தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு தற்போது கிளிநொச்சி - பாரதிபுரத்தில் இடம்பெற்று வருகிறது.

கேணல் பரிதி படுகொலை தொடர்புடன் சம்பந்தப்பட்ட விநாயகம் பிரான்ஸில் கைது

விடுதலைப் புலிகளின் மற்றும் ஒரு பிரிவின் தலைவர் என கருதப்படும் விநாயகம் இவ.இவரைப் பற்றி தமிழ்த்தாய் இணையம் இவ்வாறு கூறுகிறது (புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும்  கோத்தபாயவினால்  தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம் 

துப்பாக்கி படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டோம்: தயாரிப்பாளர் தாணு பேட்டி
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வாயில் அருகே செய்தியாளர்களிடம் பேசிய கலைப்பு- தாணு, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர்,துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களின்


       ருபுறம் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கவலைகள் சூழ்ந்தபோதும் அதை சம்ஹாரம் செய்து விட்டு மறுபுறம் புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கி விட்டார் கமல். 
வெள்ளவத்தையில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை
வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் கடந்த வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
சிராணி விவகாரம்: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க பல நாடுகள் தீர்மானம்?
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப் பிரேரணையை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இலங்கையில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின்



தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம், பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம்
பிரித்தானியைவைச் சேர்ந்த ஐநாவின் மூத்த அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி தயாரித்த அறிக்கையை கொண்டு சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

41 இலட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் 6ஆம் திகதி புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம்

41 இலட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரியில் நடைபெறுமென கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

India 521/8d
England 41/3 (18.0 ov)
2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.

16 நவ., 2012


இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி
ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வி அடைந்ததற்கு சி.ஏ.ஜி.தான் காரணம்: கபில் சிபல் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் ரூ.9407 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் போனது. ஏற்கனவே

கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம்

தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! ராமதாசுக்கும் ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி!
கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 

தொழில் அதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
 
2003-ம் ஆண்டு திரை உலகில் காலடி பதித்த நடிகை பூஜா காந்தி, ஏராளமான கன்னட படங்களில் நடித்ததன் மூலம் கன்னட திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இரட்டை சதம் அடித்தார் புஜாரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடித்த முதல் இரட்டை சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் புஜாரா. அகமதாபாத் போட்டியில் 374 பந்துகளில் 21 பவுண்டரி விளாசி இரட்டை சதத்தை எட்டினார்

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்! கி.வீரமணி வலியுறுத்தல்!
UNO வுக்கு அழுத்தம் கொடுத்து, ராஜபக்சேவை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
புதுக்காட்டில் வாகன விபத்து யாழ். மறைமாவட்ட குரு பலி
யாழ்ப்பாணம் புதுக்காட்டு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ். மறைமாவட்ட குருவான கே. லக்மன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய இவர்
சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பான மனு குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சென்றடைந்த அகதிகள் படகில் இருந்து சடலம் மீட்பு
நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பாவி மக்களைக் கொன்றுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மையை ஐ.நா பகிரங்கப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்
இலங்கையில் 40, 000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்து, இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மை ஐநாவின் உள்ளக அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தியுள்ளது

ஐ.நாவின் உள்ளக அறிக்கை: அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய மற்றுமொரு குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கை, பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது.
ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம்கேட்ட இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம் இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர் கேட்டுள்ளதாக கேகாலை மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - காசா உக்கிர மோதல்

ஹமாஸ் இராணுவ தளபதி உட்பட 13 பலஸ்தீனர் பலி


பதில் தாக்குதலில் 3 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்: ஐ.நா. அவசர கூட்டம்: இஸ்ரேலுக்கான தூதுவரை அழைத்தது எகிப்து

இஸ்ரேல் - காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் 13 பேர் கொல்லப்பட்டதோடு காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர்.

ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வுகாண அரசுக்கு ஆதரவு வழங்க தயார்

* தமிழர் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எந்த நாடும் தலையிடுவதை விரும்பமாட்டோம்
* 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம்
ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம்

பாதுகாப்பு தருமாறு தமிழக அரசிடம் நடிகர் விஜய் கோரிக்கை
தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரி நடிகர் விஜய் மற்றும் கலைப்புலி தாணு மனு கொடுத்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள துப்பாக்கித் திரைப்படம்

 சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து கோத்தாட் ஊடாக இத்தாலி மற்றும் திச்சினோ மாநிலத்திற்கு செல்லும் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஊரி மாநிலத்தில் உள்ள கோத்தாட் பகுதியில் மலை உடைந்து பாரிய கல் ஒன்று அந்த மலை அருகாக செல்லும் புகையிரத பாதையில் விழுந்துள்ளது. இதனால் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதுடன் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து

FULL SCORE CARD
India 323/4 (90.0 ov)
England
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இஸ்லாமிய புது வருடப் பிறப்பு நாளை மறுதினம் : பிறைக்குழு அறிவிப்பு
ஹிஜ்ரி 1434ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை இன்று நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை. இதனால் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை முஹர்ரம் மாதம் ஆரம்பிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு அறிவித்துள்ளது.இதேவேளை ஸபர் மாதத்தின் தலைப் பிறைப் பார்க்கும் நாள் (முஹர்ரம் பிறை 29) டிசம்பர் 15 ஆம் திகதியாகும்.முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை தீர்மானிக்கும் பிறைக் குழு மாநாடு இன்று மஃ ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதியா மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.(அறிக்கை இணைப்பு)
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இருந்து அதிர்வுக்கு நேரடி அச்சுறுத்தல்

15 நவ., 2012


ஐ.நா.வின் அறிக்கை கிடைத்த பிறகே நடவடிக்கை! இந்திய அமைச்சர் தெரிவிப்பு!!

இலங்கை போரின் போது ஐ.நா. அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது குறித்து ஐ.நா.வின் உள்விவகாரத் துறை அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.
பிரித்தானியப் பிரதமர் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்தால், கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவதில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலி பலெர்மோ மாநிலத்தில் நடை பெற்ற மாவீரர் கேணல் பரிதி அவர்களின் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கடந்த 8.11.2012 அன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறிலங்கா இனவாத அரசின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான
பரிதி  படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி (வயது 49) படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை

என்ன விலை கொடுத்தேனும் புலிகளை அழிக்கவேண்டும் என்று அரசு செயல்பட்டது !
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது.

பரிதி கொலைச் சந்தேக நபர்களின் பெயர் எந்நேரமும் வெளியாகலாம் !புலிகளி தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து

அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை வழங்குமாறு மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். 
திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கான புகையிரதப்பாதை புனரமைக்கும் வேலைகள் யாழ். குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்
 
இலங்கை போர்குற்றம் ஐ.நா.சபைக்கு ஒரு பாடம்: பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றக் கொடுக்க தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபாச காட்சிகளைக் கொண்ட இணையத்தளங்களுக்கு தடை
இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய இணையத்தளங்களை தடைசெய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

ad

ad