புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


உள்ளக விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னர் ஊடகங்களுக்கு கசிந்தது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்

ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு
கசியவிடப்பட்டுள்ளமை முற்றிலும் தவறாகும்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைக ளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் உள்விவகாரச் செயற்பாடுகளில் நிலவியதாக அவ்வறிக்கையில் கருதப்படும் குறைபாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங் களுக்கு கசியவிடப்பட்டு ள்ளமையானது இலங் கையின் இறைமைக்கு மாத்திரமன்றி ஐ. நாவின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயலென்பது இதன்போது சுட்டிக்காட்ட ப்பட்டி ருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடு இலங்கைக்கு மட்டுமன்றி எந்தவொரு நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உத்தியோகபூர்வ மற்ற முறையில் தகவல்கள் கசிந்துள்ளமை ஐ. நா. மீது ஏனைய நாடுகள் கொண்டுள்ள மதிப்பு மற்றும் மரியாதையை குறைக்கும் செய்கை யென்பதனால், எதிர்காலத்தில் எந்தவொரு நாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் இவ்வாறு வெளியிடுவதற்கு ஐ. நா. அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் ஐ. நா. விடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை மனிதாபிமான நடவடிக்கை களின் இறுதி கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டிருந்த தருஸ்மன் குழுவினர் முன்வைத்திருந்த அறிக்கையில், இலங்கையின் சில செயற்பாடுகளுக்கு ஐ. நா. பொறுப்புக் கூற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கள் அவற்றின் குறைகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளர் நாயகம் பான்கீமூனினால் மேலுமொரு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டி ருந்தது.
மேற்படி, உள்ளக விசாரணைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகச் செயற்பாடுகளில் நிலவியதாக கருதப்படும் குறைகள் அடங்கிய அறிக்கையினை தயாரித்துள்ள நிலையிலேயே அதன் தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் அதன் அதிருப்தியையும் ஆட்சேபனையையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை முற்றும் முழுதாக ஐக்கிய நாடுகள் சபை சம்பந்தப்பட்டது. ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூனினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே அதன் குறைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன வேயொழிய இதில் இலங்கை அரசாங்கம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த அறிக்கை வெளியிடப் படுவதனால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

ad

ad