புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


என்ன விலை கொடுத்தேனும் புலிகளை அழிக்கவேண்டும் என்று அரசு செயல்பட்டது !
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது என்று ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் கசிந்துள்ள நிலையிலேயே ஜோன் ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருந்தாலும் கூட எந்தவித மாற்றத்தினையும் செய்திருக்க முடியாது.

மோதல் சம்பவத்தின்போது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் எவருக்கும் உறுதியான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மீது மாத்திரமே முற்று முழுதான குற்றச்சாட்டுக்களை வைப்பதையும் ஏற்க முடியாது. ஆனாலும் இவ்விடயத்தில் சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர் என்பதை மட்டும் கூற முடியும். என்ன விலையை கொடுத்தாவது இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி வேறூ எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை. ஆகையால் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைக்கு ஐ.நா.தே முழுப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சங்கடமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்க தேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

அத்தருணத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் எம்மால் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்ளவும் முடியும். ஆனாலும் நாம் வேறுவிதமாக செயற்பட்டிருந்தால் இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதையும் எம்மால் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad