புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012




தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம், பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு பிரிவிற்கு விநாயகம் தலைமை வகிக்கின்றார்.
பிரான்ஸின் பாரிஸ் பொலிஸார் விநாயகத்தை கைது செய்துள்ளனர். ஐரோப்பாவில் செயற்பட்டு வந்த புலிகளின் வலையமைப்புக்களில் விநாயகத்தின் வலையமைப்பு மிகவும் வலுவானது.
பரிதி கொலையுடன் இலங்கை அரசாங்கத்தை தொடர்புபடுத்த புலிகள் முயற்சித்ததாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பரிதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் நபர் விநாயாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகம் 2009ம் ஆண்டு போர் இடம்பெற்ற காலத்தில் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்று, புலிகளின் வலையமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனத் சிங்களப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad