புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் புஜாராவும், யுவராஜ் சிங்கும் சிறப்பாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய புஜாரா  190 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் இரண்டாவது சதமாகும். எதிர்முனையில் இருந்த யுவராஜ் சிங்கும் அரைசதம் அடித்தார்.
 
இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 121 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன் குவித்தது. அப்போது புஜாரா 133 ரன்னுடனும், யுவராஜ் சிங் 72 ரன்னுடனும் இருந்தனர்.
 
உணவு இடைவேளைக்குப் பிறகு கூடுதல் இரண்டு ரன் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் 74 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாராவுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி 5 ரன்னில் ஸ்வான் பந்தில் கிளீன் போல்டானார்.
 
அடுத்து புஜாராவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அஸ்வின் 23 ரன்னிலும், ஜாகீர்கான் 7 ரன்னிலும் அவுட்டாக இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 521 ரன் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
 
புஜாரா 206 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது அவரது டெஸ்ட் போட்டியின் அதிகபட்ச ரன்னாகும்.
 
அடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

ad

ad