புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012



       ருபுறம் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கவலைகள் சூழ்ந்தபோதும் அதை சம்ஹாரம் செய்து விட்டு மறுபுறம் புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கி விட்டார் கமல். 

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும், ஆங்கில சப்-டைட்டிலுடனும் உலகம் முழுக்க ஆயிரம் பிரதிகளுடனும் "விஸ்வரூப'த்தை வெளியிடும் வேலைகள் நடந்து வருகிறது. இன்னும் வெளிவராத இந்தப் படைப்பின் மூலம் ஹாலிவுட் பிரபலங்கள் மத்தியிலும் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் கமல்.


ஆயினும் சர்ச்சைகளும், சலசலப்பும் கமலை தொடர்ந்தபடியே இருக்கிறது.

ஏழெட்டு வருடங்களுக்கு முன் கமல் அமெரிக்கா சென்றிருந்தபோது, "கமல்ஹாசன்' என்றிருந்த பாஸ்போட் பெயரை "ஹசன்' என வாசித்து "முஸ்லிம் தீவிரவாதியோ' என கமலிடம் கடும் விசாரணை நடத்தினார்கள் அமெரிக்க அதிகாரிகள். அந்த கசப்பிலிருந்து உரு வானதுதான் "விஸ்வரூபம்' என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

ஆயினும்... "அமெரிக்காவில் படம் பிடிக்கப் பட்டிருக்கும் "விஸ்வரூபம்' அமெரிக்க மனநிலைக்கு ஆதரவான படம் என்கிற குற்றச்சாட்டும் கமலை நோக்கி வீசப்படுகிறது.

முதலில் இந்தப் படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு கமலே இயக்குந ரானார். ஆந்திராவின் பிரபல நிறுவனமான "பிவிபி சினிமாஸ்'தான் "விஸ்வரூப'த்தை தயாரிக்கத் தொடங்கியது.

படைப்பின் தரத்திற்காக கமல் பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாததால், கவலைப்பட்ட பி.வி.பி. சுமார் 30 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில், தயாரிப்பிலிருந்து விலகியதோடு போட்ட பணத்தை திரும்பவும் கேட்டது. பட வெளியீட்டின் சமயம் பணத்தைத் திருப்பித் தருவதாக பி.வி.பி.க்கு உறுதியளித்த கமல் தயாரிப்புப் பணியையும் தானே ஏற்றார்.


உலகம் இன்று சந்தித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசும் படம்... அதனால் இந்தப் படத்தின் முதல் காட்சியை அமெரிக்காவில் வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என ஹாலிவுட் சினிமா புள்ளிகள் கமலை அழைக்க...

"இது அனைவரும் பார்க்கக்கூடிய படம்' என இந்திய தணிக்கைக் குழுவும் சான்று தர...

ad

ad