இஸ்லாமிய புது வருடப் பிறப்பு நாளை மறுதினம் : பிறைக்குழு அறிவிப்பு
ஹிஜ்ரி 1434ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை இன்று நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை. இதனால் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை முஹர்ரம் மாதம் ஆரம்பிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு அறிவித்துள்ளது.இதேவேளை ஸபர் மாதத்தின் தலைப் பிறைப் பார்க்கும் நாள் (முஹர்ரம் பிறை 29) டிசம்பர் 15 ஆம் திகதியாகும்.முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை தீர்மானிக்கும் பிறைக் குழு மாநாடு இன்று மஃ ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதியா மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.