புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012


ராஜீவ் காந்தியைக் கொல்லும்படி பிரபாகரன் எனக்கு கட்டளையிடவில்லை : தீபாவளி சிறப்பு பேட்டியில் கேபி
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்டு வந்து, தற்போது இலங்கை அரசுடன் கைகோர்த்து நடமாடும் ஐம்பத்தேழு வயது நிரம்பிய மயிலிட்டியைச் சேர்ந்த கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தீபாவளி சிறப்பு பேட்டியளித்திருந்தார்.
கேபி அளித்த பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகளாக ராஜீவ் காந்தி கொலை பற்றிய தகவல்கள் அடங்கியிருந்தன.
கடந்த 3 ஆண்டு காலமாக இலங்கை அரசின் தடுப்புக்காவலில் இருந்த நான், என்றுமில்லாதவாறு இவ்வருடம் தான் மிகவும் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் தீபாவளியைக் கொண்டாடியதாக கூறினார் கேபி.
அதிலும் தீபாவளி அன்று காலையில் NERDO (North - East Rehabilitation and Development Organization) என்ற அமைப்பில் உள்ள குழந்தைகளோடு தீபாவளியைக் கொண்டாடியதையும், அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்கள் என்னை அப்பா அப்பா என அழைத்ததையும், மதியவேளை அன்பு இல்லத்தில் இருக்கும் ஆண்களோடு ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு தீபாவளி கொண்டாடியதையும், மாலை பெண்கள் தங்கியுள்ள பாரதி இல்லத்தில் பலகாரங்களுடன் ஆடல் பாடல் என தீபாவளி கொண்டாடியதையும் என்னால் மறக்கவே முடியாது எனவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் கேபி.
மேலும் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் உங்களை இந்தியா தேடுதே என கேட்கப்பட்ட கேள்விக்கு கேப் பதிலளிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் கேபி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் எனக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் இருந்தன. அடுத்த பிரிவில் வேறு எவரும் தலையிட முடியாது. தமிழகத்தில் இருந்து செயல்பட்டவர்கள் வேறு ஒருவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர்.
எனக்கு மட்டுமல்ல... லண்டனில் இருந்த கிட்டுவுக்கும் கூட ராஜீவ் கொலை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. உண்மையை சொன்னால் கிட்டுவிடம், ராஜிவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவை மேம்படுத்துமாறுதான் பிரபாகரன் கூறியிருந்தார். காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் போன்றோர் மூலம் இந்தியாவுக்கு சென்று ராஜீவை சந்திக்க கிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும்படி உங்களுக்கு கட்டளையிட்டது யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு,
ராஜீவை கொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும் பொட்டம்மானும்தான் திட்டமிட்டிருக்க வேண்டும். பிரபாகரன் ரகசியமாக திட்டங்களை நிறைவேற்றக் கூடியவர். அதை வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டார்.  எனக்கு அப்படி பிரபாகரன் கட்டளை போடவில்லை. நானோ அல்லது என்னுடைய 'கேபி' பிரிவோ இந்த ஆபரேஷனில் ஈடுபடவில்லை. என்னுடைய பணி என்பது இயக்கத்துக்கு ஆயுதங்களைக் கொடுப்பது என்பதுதான்.
ராஜீவ் கொலை நடந்தபோதுதான் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ராஜீவ் கொலை நடப்பதற்கு முன்பு நான் இந்தியாவில் மும்பையில்தான் இருந்தேன். ராஜீவ் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் மும்பையிலிருந்து மலேசியாவுக்கு சென்றேன். என்னுடைய பயணம் முன்பே திட்டமிடப்பட்டது. ராஜீவ் கொலை சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு யாரும் அறிவிக்கவுமில்லை, ராஜீவைக் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியாது. ராஜீவ் உயிரிழந்த பின்னர் தான் ராஜீவ் இறந்த செய்தி எனக்கு தெரியும் என பதிலளித்தார் கேபி.
ஏன் உங்கள் பெயர் இண்டர்போல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என விவவுகையில்,
ராஜீவ் கொலையில் எனக்கு தொடர்பில்லை என்பது இந்தியாவின் சிபிஐக்கு தெரியும். அதனால்தான் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் நான் தலைமறைவு குற்றவாளி இல்லை.
என்னை இண்டர்போல் பட்டியலில் சேர்த்ததற்கு காரணம், என்னிடம் சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள சிபிஐ விரும்பியதுதான். அப்போது நான் இந்தியாவில் இல்லை. எங்கு இருக்கிறேன் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் இண்டர்போல் மூலம் நோட்டீஸ் விடுத்தனர்.
எந்தக் காலப்பகுதியில் இந்தியா உங்களை விசாரணைக்குட்படுத்தியது?
ராஜீவ் கொலை தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் வெளியானதுபோல் இப்போது என்னிடம் விசாரணை நடத்தப்படவில்லை. நான் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலேயே விசாரிக்கப்பட்டுவிட்டேன். சிபிஐ மற்றும் றோ அமைப்பு அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர்.
ராஜீவ் கொலைக்காக நிதி உதவி செய்தீர்களா என்று கேள்வி கேட்டனர். இப்படியான செயல்களை பொதுவாக விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு 'ரகசிய' நிதி மூலமே செய்யும் என்று விளக்கம் அளித்தேன். மேலும் தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கை துப்பாக்கி பற்றி என்னிடம் விசாரித்தனர்.
2010, 2011 காலப்பகுதியில் விசாரணை செய்ததாக கூறினீர்களே. அவ்வாரெனில் இரு தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளீர்களா? எங்கெங்கே நடைபெற்றன?
ஆம் இரு தடவைகளும் இந்திய சிபிஐ, றோ அமைப்பினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டேன். கொழும்பு பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் தனியறையில் விசாரணைக்கமர்த்தப்பட்டேன். முதல் தடவை ராஜீவ் கொலை தொடபாகவும், இரண்டாவது தடவை பொதுவான அரசியல் முறைமை பற்றியுமே விசாரித்தனர்.
அவ் விசாரணைகள் பற்றி விபரிக்கையில்,
அதாவது ராஜீவை கொல்ல தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டை நான் தந்தேனா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று சொன்னேன்.
மேலும் பெல்ட் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். போன்றவை இந்தியாவிலேயே கிடைக்கக் கூடியதுதான். அதை வெளிநாட்டில் இருந்து வாங்கித்தர வேண்டியது இல்லை என்றேன்.
அந்த பெல்ட் வெடிகுண்டை தமிழீழ விடுதலைப் புலிகளே தயாரித்திருக்கின்றனர் என்றேன். அதை சிபிஐயும் ஏற்றுக் கொண்டது.

மேலும் இந்தியாவால் "ஒற்றைக்கண் சிவராசன்" என்றழைக்கப்படுகிற சிவராசன் 9 எம்.எம். பிஸ்டல் வைத்திருந்தார். அதை நான் தான் சிவராசனுக்கு கொடுத்தேனா என்பதுதான் சிபிஐயின் சந்தேகம். அதை நான் கொடுக்கவில்லை என்றேன். அதையும் சிபிஐ ஏற்றுக் கொண்டது.

இதேபோல் இந்தியாவின் ரா அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். என்னுடன் சிலர் ஆலோசனை நடத்தினர். விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் எதிர்காலம், புலம் பெயர் தமிழர்கள், புலம் பெயர் தமிழர் அமைப்புகள், ஆயுத போராட்டத்தின் எதிரொலி ஆகியவற்றை பற்றி விவாதித்தனர் என்று கேபி கூறியுள்ளார்.
இலங்கை அரசோ, இல்லை இந்திய அரசோ மீண்டும் எத்தனை தடவைகள் என்னை விசாரணைக்கு அழைத்தாலும் நான் பதிலளிக்க தயார் நிலையிலேயே இருக்கின்றேன் என்றார் கேபி.
இநிய சிபிஐ உங்களைக் குற்றவாளி இல்லை என ஏற்றுக்கொண்டதாக கூறினீர்கள். ஆனாலும் இன்றுவரை இண்டர்போல் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படவில்லையே. என கேட்கையில்,
எனக்கு அது பற்றி தெரியாது, நீங்கள் இதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும் என கேள்வி கேட்டவரைப் பார்த்து சிரிப்புடன் பதிலளித்தார்.
உங்களின் உண்மையான பெயர் என்ன? தர்மலிங்கம் என்பது குடும்பப்பெயர். உங்களின் பெயர் சண்முகம்? குமரன்? என கேட்டதற்கு, எனது பெயர் செல்வராசா பத்மநாதன். ஆனால் இண்டர்போல் பட்டியலில் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றுதான் குறிப்பிட்டுள்ளது என கூறியுள்ளார்.
இண்டர்போல் பட்டியலில் உங்கள் பெயர் அதாவது சர்வதேசத்தால் தேடும் பயங்கரவாதி என இலங்கைக்கும் தெரியும். இப்போது இலங்கை உங்களை எப்படி பார்க்கின்றது என வினவுகையில்,
நான் தற்போது மிகவும் சுதந்திரமாகவே நடமாடுகின்றேன். என்னைப் பற்றி இலங்கை அரசுக்கு முழுமையாக தெரிவித்துவிட்டேன் என கூறினார் கேபி.
தொடர்ந்து அளித்த பேட்டியில்,
கேபி (KP)  என்பதன் சுருக்கம் குமரன் பத்மநாதன் என்பது மருகிப் போய் இப்போது கண்னாடி பத்மநாதன் என உருவெடுத்துள்ளது என கூறினார் கேபி.
அண்மையில் ஒரு இராணுவ அதிகாரி தான் தன்னை அவ்வாறு அழைத்ததாகவும், அதுவே தனக்கு பிடித்துள்ளதாகவும் இனிமேல் அவ்வாறே எல்லோரும் அழைப்பார்கள் எனவும் கூறிய கேபி, முன்னர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சிலர் கேபி என்பதன் விளக்கப்பதம் கழுதை பத்மநாதன் என வர்ணித்து அவ்வாறு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad