புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012

பரிதி  படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி (வயது 49) படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை
அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் திறன்வாய்ந்தவர்களே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள பரிதியின் மகள், இந்த படுகொலைக்கு இலங்கை முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புரிதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேற்படி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பெரிஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ad

ad