புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


இஸ்ரேல் - காசா உக்கிர மோதல்

ஹமாஸ் இராணுவ தளபதி உட்பட 13 பலஸ்தீனர் பலி


பதில் தாக்குதலில் 3 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்: ஐ.நா. அவசர கூட்டம்: இஸ்ரேலுக்கான தூதுவரை அழைத்தது எகிப்து

இஸ்ரேல் - காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் 13 பேர் கொல்லப்பட்டதோடு காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான இஸ்ஸதின் அல் கஸ்ஸாம் படையின் தளபதி அஹமட் ஜபரி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்ல ப்பட்டதைத் தொடர்ந்தே இரு தரப்பு மோதல் உக்கிரம டைந்துள்ளது.
காசா நகரில் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்த அஹமட் ஜபரி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 46 வயதான ஜபரியும், அவருடன் காரில் பயணித்த மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் ‘டுவிட்டர்’ மூலம் நேரடியாக விபரித்ததோடு தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது.
இது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல், காசா மீது நடத்திய பாரிய தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்படும் முதல் சந்தர்ப்பமாகும்.
ஹமாஸின் முன்னணி உறுப்பினரான ஜபரி முன்னர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதா அமைப்பிலிருந்து பிரிந்து ஹமாஸில் இணைந்துக் கொண்டவராவார். இவர் இஸ்ரேல் சிறையில் 13 வருடங்கள் கைதியாக இருந்த போது பல ஹமாஸ் உறுப்பினர்களின் நட்பைத் தொடர்ந்தே அந்த அமைப்பில் இணைந்து கொண்டார். எனினும் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியவராவார். இவர் 2006ம் ஆண்டில் ஹமாஸ் இராணுவ பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பதா அமைப்பிடம் இருந்து காசாவை ஹமாஸ் கைப்பற்றியதில் ஜபரிக்கு முக்கிய பங்கு உள்ளது. இவரது தலைமையில் ஹமாஸ் இராணுவ பலம் ஈரான், சூடான், லெபனானின் உதவியுடன் அதிகரித்தது.
ஜபரியின் கொலை குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு நேரடி பதில் அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டது.
மறுபுறத்தில் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் நரகத்திற்கான கதவை தானே திறந்து கொண்டுள்ளது என்று ஹமாஸ் பேச்சாளர் பவ்ஸி பர்ஹும் எச்சரித்தார். ‘ஆக்கிரமிப்பு மிக அபாயகரமான குற்றம். அதன் மூலம் எல்லா சிகப்பு எல்லைகளையும் மீறப்பட்டுள்ளது. இது யுத்த பிரகடனமாகவே கருத வேண்டியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் குறைந்தது 20 ரொக்கெட் தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தியது.
மோதல் உக்கிரம்
ஹமாஸ் இராணுவ பிரிவு தளபதி கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஹமாஸ¤க்கும் ஏனைய தீவிரவாத இஸ்லாமிய குழுவினருக்கும் நாங்கள் தெளிவான செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறோம். தேவை ஏற்படின் காசா மீது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த எந்நேரமும் தயார் நிலையில் உள்ளோம். எமது மக்களை பாதுகாக்க எதையும் செய்வோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதல் ஆரம்ப நடவடிக்கை என்று இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் எஹுவட் பராக் குறிப்பிட்டார். தெற்கு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களின் சக்தியை முடக்கும் வரை இஸ்ரேல் ஓயப்போவதில்லை என அவர் சூளுரைத்தார்.
இஸ்ரேல் தலைவர்களின் எச்சரிக்கைகள் படியே இஸ்ரேல் காசா மீது நேற்று முன்தினம் தொடக்கம் வான், தரை வழிகளால் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. இவ்வாறு இஸ்ரேல், காசா மீது 100க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை நடத்தியது. இதனால் 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இதிலே மூன்று சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் கொல்லப் பட்டுள்ளார். தவிர 115 பேரளவில் காயமடைந்தனர்.
இந்த தொடர் தாக்குதல்களை ஒட்டி காசாவிலுள்ள மருத்துவமனைகள், உஷார்படுத்தப்படுள்ளதோடு வீதிகளெங்கும் அம்பிபுலன்ஸ் வண்டிகள் விரைந்த வண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே நேற்றைய தினம் இஸ்ரேல் வடக்கு காசா மீது நடத்திய மற்றுமொரு தாக்குதலில் மேலும் இரு பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் பலஸ்தீனத்திலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் கைரியாத் மலாஹி நகர் மீதே இந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது காசாவில் இருந்து வடக்காக 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இந்த நகரின் வீடொன்றின் மீது மேற்படி ரொக்கெட் நேரடியாக தாக்கியுள்ளது. இதில் மேலும் 4 பேர் காயமடைந்து ள்ளனர். இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் இராணுவ பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். இதன் போது ஈரானில் தயாரிக்கப்பட்ட பஜ்ர் எவுகணை மூலம் டெல் அவிவுக்கும் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் உறுதி செய்யவில்லை.
கடந்த சனிக்கிழமை காசா எல்லையில் பலஸ்தீன போராளிகள் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மூலம் இஸ்ரேலிய இராணுவ ஜீப் வண்டி மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடை யில் மீண்டும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 7 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட னர்.ஒபாமா,
பான்கீ மூன் அவரச யோசனை
இஸ்ரேல்- காசா தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆகியோரை தொலைபேசி ஊடாக அழைத்து ஆலோசித்துள்ளனர். இதில் ஒபாமா இஸ்ரேலுக்கு தம்மை பாதுகாக்கும் உரிமை இருப்பதாக வலியுறுத்தியுள்ள§¡டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த தாக்குதல்களை ஒட்டி நேற்றைய தினத்தில் பலஸ்தீனின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டங்களில் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமாறு கோசம் எழுப்பப்பட்டன. பலஸ்தீனின் மேற்குக் கரையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
எகிப்து தூதுவர் திரும்ப அழைப்பு
இந்த தாக்குதல்களை ஒட்டி எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, இஸ்ரேலுக்கான எகிப்து தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டார். இஸ்ரேல் தூதுவராக புதிதாக நியமிக் கப்பட்ட அதவ் மொஹமட் சலம்மை நாடு திரும்பும்படி மொஹமட் முர்சி உத்தரவிட்டிருப்பதாக எகிப்து தேசிய தொலைக்காட்சி நேற்று செய்தி வெளி யிட்டது.
அதேபோன்று எகிப்தின் இஸ் ரேலுக்கான தூதுவரையும் வெளியேறும்படி மொஹமட் முர்சி கோரியுள்ளார். இது தவிர இஸ்ரேல் காசா விவகாரம் தொடர்பில் அவசர கூட்டத்தை நடத்து மாறும் ஐ. நா. பாதுகாப்புச் சபையை மொஹமட் முர்சி கோரியுள்ளதோடு அரபு லீக்கிற்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்திலும் இஸ்ரேலின் லெபனான், பலஸ்தீன தாக்குதல்கள் இடம்பெற்ற 1982, 1988, 2001 மற்றும் 2005ஆம் ஆண்டுகளிலும் இஸ்ரேலுக்கான எகிப்து தூதுவர்கள் மீள அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எகிப்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு இன்றைய தினத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அழைப்புவிடுத்துள்ளது.
ஐ. நா. அவசர கூட்டம்
இதேவேளை எகிப்து மற்றும் ஏனைய அரபு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புச் சபை இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பில் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளது. எனினும் 90 நிமிடங்கள் இடம்பெற்ற 15 நாடுகள் அங்கத்துவம் கொண்ட பாதுகாப்புச் சபை கூட்டத்தில் மோதல்கள் குறித்து எந்த தரப்பின் மீதும் கண்டனம் வெளியிடப்பட வில்லை.
பாதுகாப்புச் சபையில் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கான ஐ.நா. தூதுவர் ஹார்தீப் சிங் கூறும்போது, பாதுகாப்புச் சபை எடுத்த ஒரே தீர்மானம் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் மீது கண்டனம் வெளியிட அரபு நாடுகள் வலியுறுத்தின. ஐ.நாவின் அரபு நாடுகளின் குழுத் தலைமை ஏற்றுள்ள சூடானுக்கான ஐ.நா. தூதுவர் டப்பார் அல் எல்ஹாக் தாக்குதல்களை நிறுத்த கடுமையான அழுத்தம் கொடுக்க ப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
எனினும் ஐ.நா.வில் இஸ்ரேலின் செயலுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இஸ்ரேல் மீது இந்த ஆண்டில் மாத்திரம் 768 ரொக்கெட்டுகள் தாக்கியுள்ளன. ஏனைய நாடுகள் போன்று இஸ்ரேலுக்கும் நம்மை பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என்று ஐ.நா.வின் அமெரிக்காவுக்கான தூதுவர் அசான் ரைஸ் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தினார்.
ஹிலாரி கிளின்டனுக்கு அடுத்த அமெரிக்காவின் இராஜாங்க நியமிக்கப்படு வார் என எதிர்பார்க்கப்படும் சுசான் ரைஸ் இவ்வாறான ரொக்கெட் தாக்குதல்கள் மத்திய கிழக்கு அமைதி முயற்சிக்கு பாரிய பின்னடைவு என்றார்.
அதேபோல் ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் மார்க் லியாலும் இஸ்ரேல் மீதான ரோக்கெட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதில் பாதுகாப்புச் சபை அவசர கூட்டத்தில் பலஸ்தீன, இஸ்ரேல் நாடுகளின் ஐ.நா. தூதுவர்களும் உரை யாற்றினர்.
பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூரி கூறும்போது, 11 மாத குழந்தை, மேலும் இரு குழந்தைகள் 19 கர்ப்பினி பெண் ஆகியோரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள் ளனர்.
உலகப் பார்வையின் முன்னிலையில் எமது மக்கள் மரணம், பயங்கரங்களுக்கு முகம்கொடுக்கின்றனர் என்றார். பலஸ்தீனம் ஐ. நா.வில் பார்வையாளர் அந்தஸ்து கோருவதையொட்டியே இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்துவதாகவும் பலஸ்தீன தூதுவர் குற்றம் சாட்டினார். மறுபுரத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதுவர் இஸ் ரேல் மீது கடும் கண்டனத்தை வெளியிட்டார். இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரினார்

ad

ad