புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012

அமெரிக்க கிராண்ட் பீரி -மெக்லரன்- மெர்சிடஸ் அணி வீரரான அவர் பந்தய தூரத்தை ஒரு மணி 35 நிமிடம் 55.209 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார்.
கார் பந்தய போட்டிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது. 'பார்முலா 1' கார் பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
 
இதன் 19-வது சுற்றான அமெரிக்க கிராண்ட் பீரி நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். மெக்லரன்- மெர்சிடஸ் அணி வீரரான அவர் பந்தய தூரத்தை ஒரு மணி 35 நிமிடம் 55.209 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார்.
 
இந்த சீசனில் ஹேமில்டன் பெற்ற 4-வது வெற்றியாகும். ஏற்கனவே கனடா, அங்கேரி, இத்தாலி, கிராண்ட் பிரீ போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார்.
 
ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 2-வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
 
இதுவரை நடந்த 19 சுற்றுகள் முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 273 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக 'பார்முலா 1' பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் அவர் உள்ளார்.
 
அவருக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினை சேர்ந்த அலோன்சா 260 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். கிமி ரெய்க்கோனன் (பின்லாந்து) 206 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், ஹேமில்டன் (இங்கிலாந்து) 190 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், மார்க் வெப்பர் (ஆஸ்திரேலியா) 167 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும் உள்ளனர்.
 
'பார்முலா1' கார் பந்தய போட்டியின் 20-வது மற்றும் கடைசி சுற்று பிரேசிலில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

ad

ad