புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2013

நெல்லையில் சிக்கிய 6 பேர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடையவர்களா?
பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19-ந் தேதி சேலத்தில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க
சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், சூப்பிரண்டு அன்பு ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.


அந்த குழுவினர் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, கொலையில் தொடர் புடை யதாக மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோரின் பெயர்களை படத்துடன் அறிவித்தனர். அவர்களை பற்றி தகவல் கொடுத்தால் 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்த கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகத்தின் பேரில் பலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடிட்டர் ரமேசை கொல்ல சதிதிட்டம் சிறையில் தீட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
பெங்களூரில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிச்சான் புகாரியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவனது கூட்டாளிகள் நெல்லை மேலப்பாளையத்தில் பதுங்கி இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை நெல்லை சென்றனர். மேலப்பாளையத்தில் முற்றுகையிட்டு முகமது காசிம், பஷீர் ஷேக் அகமது, சாகுல் ஹமீது, பிஸ்மி, முகமது சம்சுதீன், அன்சாரி ஆகிய 6 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மேலப்பாளையம் பங்காளப்பா தெருவில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரியவந்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு டெட்டனேட்டர்கள், செலரி என்ற வெடிமருந்து உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 25 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிடிபட்ட 6 பேரும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு இருக்கிறதா? வெடிமருந்துகளை எதற்காக பதுக்கி வைத்திருந்தனர் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
அவர்களிடம் விசாரணை ஐ.ஜி.மஞ்சுநாதா விசாரணை நடத்துகிறார். விசாரணை முடிவில் பிடிபட்ட 6 பேருக்கும் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்று தெரிய வரும்.

ad

ad