புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2013

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்புமனு த.தே. கூட்டமைப்பு தாக்கல்
வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்பு மனுவினை நண்பகல் 12.01 இற்கு தாக்கல் செய்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், மற்றும் புனித திரேசா தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் இந்த வேட்பு மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச சபைகளின் கீழ் உறுப்பினர் மற்றும் வேட்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

ad

ad