30 ஆக., 2015

100 பேரைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒப்புதல்! வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்


45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 55க்கும் மேற்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை உள்வாங்கும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த யோசனை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஒரு பகுதியாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால் அமைச்சர்கள் 30ஆக இருக்க முடியும்.
தனிக்கட்சி ஒன்று ஆட்சியமைக்குமானால் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சுக்கள் 40ஆக இருக்க வேண்டும் என்று ஒழுங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய யோசனை வியாழக்கிழமையன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.