புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2025

சட்டவிரோத தடுப்பு முகாம் இருந்ததை ஒப்புக்கொண்டார் அட்மிரல் உலுகத்தென்ன! [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்

செம்மணியில் இன்று வரை 130 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 29 ஆவது யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 29 ஆவது யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்!- சோமரத்ன ராஜபக்ச ஜனாதிபதிக்கு கடிதம். [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளா

ad

ad