புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 ஏப்., 2020

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
மாஸ்குகளுக்காக அண்டை நாடுகளையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்து, தானே தனக்கான மாஸ்குகளை தயாரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தயாராகும் மாஸ்குகள் மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்காக சுவிட்சர்லாந்து பெருமளவில் பிற நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதியையே நம்பியுள்ளது.

உலகம் முழுவதிலுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், வழக்கமான தொகையை விட பல மடங்கு அதிக பணம் செலுத்தி அவற்றை வாங்கும் நிலை சுவிட்சர்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது.


மாஸ்குகளுக்காக அண்டை நாடுகளின் உதவியை சுவிட்சர்லாந்து எதிர்பார்த்திருக்கும் நிலையில், சில நாடுகள் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்படும் சரக்குகளை தடுத்து நிறுத்தி தாங்களே எடுத்துக்கொள்ளும் சம்பவங்களும் சமீப காலமாக நடந்துவருகின்றன.

எனவேதான் சுவிட்சர்லாந்து தானே தனக்கான மாஸ்குகளை தயாரிக்கும் இயந்திரங்களை தருவித்து வருகிறது.