புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 ஏப்., 2020

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? அதிகாரப்பூர்வ விளக்கம்

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 27,000-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கனடாவில் இருக்கும் தன் மகனின் நிலை குறித்து நடிகர் விஜய் வருத்ததில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

அதில், விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் சஞ்சய்யால், இந்தியாவிற்கு திரும்பமுடியவில்லை, இதை நினைத்து விஜய் வருத்தத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் இது குறித்து விஜய் தரப்பு கூறுகையில், கனடாவில் சஞ்சய் இருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். விஜய்யும் அவ்வப்போது மகனிடம் பேசி வருகிறார்.

ஆகையால், விஜய் கவலை என்று வெளியாகியுள்ள செய்திகளில் எல்லாம் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது