16 ஏப்., 2020

கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் உள்ள 113 பேர் இன்று புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.