புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2020

பிரான்சில் 24 மணிநேரத்திற்குள் 1438 சாவுகள் - இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ள தொற்றுக்கள்

உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம் சாவுகளுடன், உலகத்தில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்
24 மணி நேரத்திற்குள் பிரான்சில் தொடர்ச்சியாக உச்சமடைந்து, வைத்தியசாலையில் 514 சாவுகள் - வயோதிப இல்லங்களில் 924 சாவுகள்(சில நாட்களின் பிந்திய கணக்கெடுப்பு). மொத்தச் சாவுகள் 1438
மொத்தச் சாவுகள் 17.167
வைத்தியசாலையில் சாவுகள் 10.643
வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து சாவுகள் 6.524
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 31 779 (-513)
உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 6.457 (-273)
30.955 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மொத்தமாக 147.863 (+4,560) பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சர்வதேசக் கணக்கெடுப்புகள் கூறும் நிலையில் பிரான்சின் சுகாதாரத் திணைக்களம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 108.339 எனத் தெரிவித்துள்ளது

ad

ad