29 ஜன., 2019

நவீன மயமாகின்றது- யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!!

யாழ்ப்­பாண மையப் பேருந்து நிலை­யம், அடுக்­கு­மாடி வாக­னத் தரிப்­பி­டம், வர்த்­த­கத் தொகுதி என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும்,
யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை மற்­றும் நவீன சந்தை ஆகி­ய­வற்றை இணைக்­கும் மேம்­பா­லத்தை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதற்­காக பெரு­ந­கர மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு 400 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கி­யுள்­ளது.யாழ்ப்­பாண மையப் பேருந்து நிலை­யம் தற்­போது அமைந்­துள்ள காணி­யி­லேயே நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பேருந்து நிலை­யம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.இந்த ஆண்டு மார்ச் மாதம் அள­வில் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு அடுத்த ஆண்டு ஆரம்­பத்­தில் மக்­கள் பாவ­னைக்கு கைய­ளிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.இந்­தத் திட்­டம் யாழ்ப்­பா­ணம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.யாழ்ப்­பாண மையப் பேருந்து நிலை­யக் காணி­யில் அமைந்­துள்ள தற்­கா­லிக கடை­களை அகற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை மேயர் இ.ஆனோல்ட் ஏற்­க­னவே அறி­வு­றுத்­தல் வழங்­கி­யுள்­ளார்.மையப் பேருந்து நிலை­யத்தை மறு­சீ­ர­மைக்­கும் காலப் பகு­தி­யில், யாழ்ப்­பா­ணம் தொட­ருந்து நிலை­யத்­துக்கு முன்­பா­க­வுள்ள காணி­யில், மையப் பேருந்து நிலை­யம் தற்­கா­லி­க­மாக இயங்­கும் என்­றும் மேயர் அறி­வித்­துள்­ளார்.நவீ­ன­ம­ய­மாக அமைக்­கப்­ப­டும் மையப் பேருந்து நிலை­யத்­தில் கீழ்த் தளத்­தில் பேருந்து சேவை­கள் நடை­பெ­றும். தற்­போ­துள்­ள­வா­றாக அல்­லா­மல் பயண நேரத்­துக்கு சில நிமி­டங்­கள் முன்­ன­தாக பேருந்து நிலை­யத்­துக்கு பேருந்­து­கள் வந்து, பய­ணி­களை ஏற்­றிச் செல்­லும். நீண்ட நேரத்­துக்கு பேருந்­து­கள் தரித்து நிற்­காது.முத­லா­வது தளத்­தில் வர்த்­த­கத் தொகுதி அமை­ய­வுள்­ளது. இரண்­டா­வது தளத்­தில் வாக­னத் தரிப்­பி­டம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. வாக­னத் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து நேர­டி­யாக, யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்­கும், நவீன சந்­தைக்­கும் மேம்­பா­லம் கட்­டப்­ப­ட­வுள்­ளது