29 ஜன., 2019

வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே-சாள்ஸ்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சாம்பல்தோட்டம் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட வேறு பொருத்தமான தலைமைகள் இல்லை. புதிய கட்சி பற்றியும், புதிய தலைமைத்துவம் பற்றியும் பலர் இன்று பேசுகிறார்கள்.

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்.

வவுனியா வெடுக்குநாரிமலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பன இந்துக்களின் பூர்விக பிரதேசங்கள் அங்கு இந்துக்களின் அடையாளங்களை அழித்து பௌத்த சின்னங்களை நிறுவும் செயற்பாட்டிற்கு தொல்பொருட் திணைக்களம் உடந்தையாக இருக்கிறது.

இவ்வாறான விடயங்களை கூட்டமைப்பு மாத்திரமே தற்போது கதைத்து வருகின்றது. வன்னியின் மூன்று மாவட்டங்களும் தற்போது அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியுள்ளது.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கான பல தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்