26 மே, 2019

மக்களிடம் பணம் பறிக்கும் கம்பரெலிய தரகர்களாக ப்ளட் உறுப்பினர்கள்

அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாகப்ளட் உறுப்பினர்கள்
செயற்பட்டுவருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் கம்பரெலிய திட்ட ஆரம்ப நிகழ்வுகளுக்கு எனக் கூறி இடைத்தரகர்களாகச் செயற்படும் பிரதேச சபை மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் மக்களிடம் பணம் அறவிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் கம்பரெலியயவைக் காவிக்கொண்டு திரிவதில் முன்னிற்பவரனா யாழ் மாநகரசபை 2 ஆம் வட்டார ப்ளட்
உறுப்பினரான தர்சானந் உள்ளிட்ட சிலர் தமது பிரதேசங்களில் கம்பரெலிய ஆரம்ப வைபவவங்களுக்கு எனக் கூறி ஒவ்வெரு குடும்பத்திடமும் தாலா 2 ஆயிரம் ரூபா 40 ஆயிரம் ரூபா பணம் அறவிட்டமை தெரியவந்திருந்தது.

இந்நிலையில் அவர்களின் திருட்டு அம்பலமாகிய நிலையில் அப் பணத்தினை திருப்பிச் செலுத்தும் வகையில் முற்பணமாகவே பெற்றோம் எனக் கூறி உடனடியாகவே அப் பணத்தினை மீளச் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஐந்தாம் வட்டாரத்திலும் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிக்கசிந்துள்ளன.

இது தொடர்பில் குழப்பமடைந்த தர்சானந்த நாங்கள் 40 ஐம்பது இலட்சம் உங்களுக்காக செலவளிக்கிறோம் எங்களுக்கு ஒரு நாற்பதாயிரம் தருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.