புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2017

பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை பிரதமர்
தெரேசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப்பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் நிரந்தரமாக பிரித்தானியாவில் இருக்க முடியாது என அறிவிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானிய வெளியேறி பின் புதிய குடியேறிகளுக்கு, புதிய விசா உட்பட இடம்பெயர்வு தடை உட்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட திகதிக்கு முன் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் உரிமை பாதுகாக்கப்படும் என தெரேசா மே உறுதியளிப்பார்.
அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad