புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2017

சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று எம் எல் ஏக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சசிகலா
அளித்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தான் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிமுக அணி இரண்டாக உடைந்துள்ளது. அதில் ஓபிஎஸ் அணி மற்றொன்று சசிகலா அணி.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால், அவர் பெங்களூரு பரப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்பதற்காக எம்எல்ஏக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அதில் 20 எம்.எல்.ஏக்களை மட்டும் பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், சசிகலா தரப்பில் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமல் முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் 20 பேர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலையில் இருந்த எம்எல்ஏக்களுக்கு மட்டும் தனி வகுப்பு எடுக்கப்பட்டதாகவும் ஆட்சி கவிழ்ந்துவிட்டால், மீண்டும் உங்களால் எம்எல்ஏ ஆக முடியாது. உங்களுக்குத் தேவையானதை வழங்குவோம் என்று தினகரன் சமரசம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களில், நீங்கள் சொல்பவருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பணிக்கு அமைச்சர்கள் வேறு யாரையாவது நியமித்தாலும், உங்களுக்குத் தேவையான தொகை வந்து சேரும். தவிர, ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் பணம் அன்பளிப்பாக வந்து சேரும் என்று தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக, ஐந்து கோடியைக் கொடுக்க இருக்கிறோம். பணமதிப்பு நீக்க விவகாரத்தால் சிக்கல் இருப்பதால், அதற்குரிய வகையில் தங்கம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கேற்ப நம்பிக்கை அளிக்கும் வகையில், வீடுகளுக்கே சென்று முதற்கட்ட தொகையை விநியோகம் செய்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்னும் இரண்டு பங்கு எம்எல்ஏக்களுக்கு மீதம் தரவேண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ad

ad