புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2018

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா மணிவண்ணனுக்கும் சிக்கல் மேயர் வேட்பாளர் நேரடியாக தெரிவாகி இருக்க வேண்டும் நியமன ப்ட்டியலில் வர முடியாது காங்கிரஸ் மேயர் போட்டிக்கு வரவேண்டுமானாலும் கூடமைப்பு அல்லது ஈ பி டி பி ஆதரிக்க எண்டும் ஆக கூடடமைப்புக்கு ஈ பி டி பி ஆதரவு கொடுத்தல் கூடாது என்றால் காங்கிரசுக்கு கொடுக்கலாமா எல்லாமே சிக்கல்

மேயர்யா ழ்ப்­பா­ண மாந­கர சபை­யின் மேய­ர் பதவிக்கு ஆர்­னோல்ட்­டின் பெயர் முன்­மொ­ழி­யப்பட்­டால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்­பில் மேயர் பதவிக்கு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வட்­டா­ரங்­கள் தெரி­வித்துள்ளன.
யாழ்ப்­பா­ண மாந­கர சபை­யின் மேய­ர் பதவிக்கு ஆர்­னோல்ட்­டின் பெயர் முன்­மொ­ழி­யப்பட்­டால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்­பில் மேயர் பதவிக்கு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வட்­டா­ரங்­கள் தெரி­வித்துள்ளன.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்லை. கூடிய ஆச­னங்­களை கூட்­ட­மைப்புப் பெற்­றுக் கொண்­டுள்­ள­தன் அடிப்­ப­டை­யில், மாந­கர சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்­கான முன்­ந­கர்­வு­களை அந்­தக் கட்சி மேற்­கொண்­டுள்­ளது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி 13 ஆச­னங்­க­ளு­டன் இரண்­டா­வது நிலை­யில் உள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக ஆர்­னோல்ட்­டின் பெயரை முன்­மொ­ழி­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நேற்­றுத் தீர்­மா­னித்­தது. இந்த முடிவை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி நிச்­ச­ய­மாக எதிர்க்­கும் என்று அந்­தக் கட்­சி­யின் முக்­கிய பொறுப்­பில் உள்ள உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இதே­வேளை, சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் கட்­சிக்கு வெளி­யில் இருந்து ஆத­ரவு வழங்­கப்­ப­டும் என்று ஈ.பி.டி.பி. ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது. கூட்­ட­மைப்­பின் மேயர் பெயர் முன்­மொ­ழிவை எதிர்த்து, முன்­ன­ணி­யால் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­டா­லும், ஈ.பி.டி.பி ஆத­ரவு வழங்­கா­மல் வெற்­றி­பெற முடி­யாது.

அதேவேளை, யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் வேட்­பா­ள­ராக வி.மணி­வண்­ணன் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தார். அவர் வட்­டா­ரத்­தில் நேர­டி­யா­கப் போட்­டி­யிட்­டி­ருக்­க­வில்லை. விகி­தா­சா­ரப் பட்­டி­ய­லி­லேயே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு விகி­தா­சா­ரப் பட்­டி­ய­லில் 4 ஆச­னங்­கள் கிடைத்­துள்­ளன. அந்­தக் கட்சி வட்­டா­ரங்­க­ளில் 9 ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டது. வட்­டா­ரத்­தில் வெற்றி பெற்­ற­வர்­கள் அனை­வ­ரும் ஆண்­கள். இத­னால் அந்­தக் கட்­சி­யின் சார்­பில் மாந­கர சபைக்கு கட்­டா­யம் 4 பெண்­க­ளின் பெயர்­களை விகி­தா­சார பட்­டி­யல் ஊடாக வழங்க வேண்­டிய நிர்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது. அத­னால் மணி­வண்­ணன் உறுப்­பி­ன­ரா­வ­தில் சிக்­கல் நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

அந்­தக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு வட்­டா­ரத்­தில் வெற்றி பெற்ற 9 பேரில் யாரா­வது ஒரு­வர் பதவி வில­கு­வ­தன் ஊடா­கவே மணி­வண்­ணன் மாந­கர சபை உறுப்­பி­ன­ராக முடி­யும் என்பது குறிப்பிடத்தக்கது.மேயர் வேட்பாளர் நேரடியாக தெரிவாகி இருக்க வேண்டும் நியமன ப்ட்டியலில் வர முடியாது காங்கிரஸ் மேயர் போட்டிக்கு வரவேண்டுமானாலும் கூடமைப்பு அல்லது ஈ பி டி பி ஆதரிக்க எண்டும் ஆக கூடடமைப்புக்கு ஈ பி டி பி ஆதரவு கொடுத்தல் கூடாது என்றால் காங்கிரசுக்கு கொடுக்கலாமா எல்லாமே சிக்கல்

ad

ad