15 பிப்., 2018

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து திரும்பிய வான் விபத்து! - 6 பேர் படுகாயம்


திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவராத்திரி வழிபாடுகளை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
வவுனியா வேப்பங்குளம் 6ஆம் ஒழுங்கைப் பகுதியில், வவுனியாவில் இருந்து கற்பகபுரம் நோக்கி சென்ற பஸ்சுடன் குறித்த வான் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், வானில் பயணித்த குழந்தை உட்பட 6 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.