புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2019

30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன நடத்தியிருந்தார்.

இப்போது அதில் என்ன இருக்கின்றது என்பது தனக்குத் தெரியாதென திடீரென்று நித்திரையிலிருந்து எழுந்தவர் போல அவர் கூறுவது நகைப்பிற்குரியது எனத் தெரிவித்திருக்கின்றார்.

30(1) தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருவருட காலநீடிப்பே 2017 மார்ச்சிலும், 2019 மார்ச்சிலும் இரு தனித்தனித் தீர்மானங்களின் வாயிலாக இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மூலமுதல் தீர்மானத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. உண்மைநிலை அவ்வாறிருக்கையில், கடந்தவார தீர்மானத்தில் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதும், இலங்கை இணை அனுசரணை வழங்கியது தனக்குத் தெரியாது என்றும் ஜனாதிபதி பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கின்றார் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad