புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2019

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு: பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உடன்பாடின்றி வெளியேறுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மூன்றாவது முறையாகவும் நேற்று (வெள்ளிக்கிழமை) தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு பிரான்ஸ் ஏற்கனவே தயாராகவுள்ள நிலையில், இச்செயற்பாட்டை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய தேர்தல், இரண்டாவது வாக்கெடுப்பு அல்லது சுங்க ஒன்றியத்திற்கான முன்மொழிவு இன்றேல் உடன்பாடின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா என்பது தொடர்பாக இனி பிரித்தானியாவே தீர்மானிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது

ad

ad