18 ஜூலை, 2019

5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை-யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று (போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ யாழ் மாநகர சபையினால் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) தொடர்பான ஒப்பந்தம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக முறைப்படி கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது. 5ஜியையும் ஸ்மார்ட் லாம் போல் திட்டத்தையும் (SMART LAMP POLE) தொடர்புபடுத்தி சம்பந்தமில்லாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் அதனை எங்களிடம் நேரடியாக கலந்துரையாட முடியும். ஆனால், இந்த விடயத்தில் நன்கு படித்த வல்லுனர்களும் மக்களுடன் இணைந்து தவறான புரிதலுடனான கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.

இலங்கையில் 5ஜி அலைவரிசை இல்லை என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்