புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2019

ரணிலின் காலத்தைக் கடத்தும் கதை- மாவை

இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சு நடத்தினேன். இதன்போது எமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி செயட்பாடுகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தினேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad