புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 ஆக., 2019

யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும்.
இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.


இன்று முதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டிகள் பயணிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்டு 4453 இலக்க ரயிலாக நள்ளிரவு 12.50 ற்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் பயணிக்கும்.

நாளை மன்னார் ரயில் நிலையத்தில் இரவு 7.00 மணிக்கு புறப்படும் 5844 இலக்க ரயில் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும். 4088 இலக்க இரவு தபால் ரயிலுடன் ஒன்றிணைக்கப்படும்.

4082 என்ற இலக்க ரயில் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 ற்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.