இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் முறைப்படி ஆரம்பமாகி விட்டன.
ஆகஸ்ட் முதலாம் திகதியிட்டு ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐநா விசாரணைக் குழுவின் விசாரணை முறை மற்றும் அதற்கு சாட்சியங்களை அளிக்கும் முறை குறித்து விபரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த எழுத்து மூலமான முறைப்பாடுகளை மின்னஞ்சலில் அல்லது அஞ்சலில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் பல சூட்சுமங்கள் மறைந்துள்ளன.
அதில் முக்கியமானது இந்த விசாரணைகள் இறுதிப் போரை மட்டும் மையப்படுத்தியதாக அமையவில்லை. கிட்டத்தட்ட பத்தாண்டு காலச் சம்பவங்கள் குறித்து ஆராயப் போகிறது என்பது முக்கியமான ஒரு விடயம்.
முன்னதாக போரின் முழுக் கால கட்டத்திலும் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளே மேற்குலகினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து