க.பொ.த (உ/த) பரீட்சை நாளை: 2,96,313 மாணவர்கள் தோற்றம்
ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்கு 2 இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
தோற்றவுள்ளனர்.
இவர்களுள் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 192 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளெனவும் ஏனைய 62 ஆயிரத்து 116 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளெனவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு. எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.
நாடு முழுவதுமுள்ள 2 ஆயிரத்தி 120 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற வுள்ள அதேநேரம் 295 நிலையங்கள் இணைப்பு மத்திய நிலையங்களா கவும் செயற்படவுள்ளன.
இதேவேளை பரீசை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 29 முதல் ஆரம்பிக்கப்படும்.
பரீசை நடைபெறும் காலப் பகுதிக்குள் பரீட்சை ஊழல் இடம் பெறாத வகையில் விசேட கண் காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.