புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


அரசை விட்டு வெளியேறுமாறு ஹக்கீமிடம் மீண்டும் ஜனாதிபதி உத்தரவு
ஹக்கீமிடம் அரசை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மீண்டும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக அரசின் உயர் மட்டச் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ஹக்கீமிடம் பல தடவைகள் பல சந்தர்ப்பங்களில் அரசை விட்டு வெளியேறுமாறு சொல்லி விட்டார். ஆனால் ஹக்கீம் அரசை விட்டு வெளியேறுவதாக இல்லை. அரசை விட்டு ஹக்கீம் வெளியேறமாட்டேன் என்று ஹக்கீம் அடம் பிடிக்கின்றார்.
கடந்த வாரமும் ஹக்கீமைப் பார்த்து ஜனாதிபதி நாம் வெளியாக்குவதற்கு முன்னர் தானாக ஹக்கீம் வெளியாக வேண்டும் என்று ஜனாதிபதி கடிந்துள்ளார். அமைச்சர் என்ற பந்தாவில் பந்தோபஸ்துடன் வலம் வரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவ்வளவு சுலபமாக அமைச்சர் பதவியை விடுவாரா? இது நடக்குமா?அ
ப்படி நடந்தால் அதுவொரு உலக அதிசயம். அரசுக்கு எதிராக பல வகையான சம்பவங்களை ஹக்கீம் சர்வதேசத்திடம் முறையிடுகின்றார் என்ற குற்றச் சாட்டின் பெயரில்தான் ஜனாதிபதி கடிந்துள்ளதாக அறியப்படுகின்றது.
ஹக்கீம் விடயத்தில் அரசு உறுதியாக உள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். ஹக்கீம் இந்த அரசோடு தானாக விரும்பிச் சேரவில்லை அதாவது அழைத்துவரவில்லை. இழுந்து வந்துள்ளார். அதனால் ஹக்கீமை நம்பத் தயாரில்லை என்பதும் ஹக்கீம் மீது அரசும் துளியளவும் நம்பவில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஹக்கீம் மீது நம்பிக்கை இழந்துள்ள அரசு
ஆனால் ஹக்கீம் பல கோணங்களில் அரசு தன்னை நம்பவேண்டும் என்று முயற்சிக்கின்றார், செயற்படுகின்றார். ஆனால் அரசு நம்புவதாக இல்லை. காரணம் ஹக்கீம் தன்னுடைய எம்பிகள் மூலமாக சந்திரிக்கா ஆட்சியைக் கவிழ்த்து ஒரு வருடம் நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை உருவாக்கியவர் ஹக்கீம்.
2001ம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சியை கவிழ்த்து ரணிலை பிரதமராக நியமித்து இரண்டு முழு அமைச்சுப் பதவியை ஹக்கீம் பெற்றுக் கொண்டு வலம் வந்தவர். ஆனால் சந்திரிக்கா ஹக்கீம் ஏற்படுத்திய ரணில் தலைமையிலான பிரதமர் கொண்ட பாராளுமன்றத்தை 2002ம் ஆண்டு கலைத்து மீண்டு ஒரு பொதுத் தேர்தலில் சந்திரிக்கா ஆட்சி அமைத்தார்.
ஒரு நிறைவேற்று ஜனாதிபதியை பகைத்துக் கொண்டு முட்டி மோதிக்கொண்டு ஆட்சியை கவிழ்த்தார். ஆனால் 2002ம் ஆண்டு சந்திரிக்கா, ஹக்கீம் இல்லாது தனியாக ஆட்சி அமைத்தார்.
இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் துரோகத்தின் கறைகள் படிந்த வரலாறுகள். அதன் பின்பு முஸ்லிம் காங்கிரஸ் பேரம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் துண்டு துண்டுகளாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரித்தார். கட்சியில் தான்மட்டும் இருக்க வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் தனது காலுக்கு கீழ் இருக்க வேண்டும் என்று அன்று தொட்டு இன்று வரையும் ஹக்கீம் நினைக்கின்றார்.
அரசைக் காப்பாற்றத் துடிக்கும் ஹக்கீம்
மஹிந்த கம்பனியின் ஆட்சியில் ஹக்கீம் அரசுக்கு ஆதரவாக உச்சகட்டமாக உதவுகின்றார். கடந்த ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்கைக்கு ஆதரவாக அரபுநாடுகளுக்கெல்லாம் விஜயம் செய்து ஹக்கீம் ஆதரவு திரட்டினார்.
மற்றும் திவிநெகும சட்ட மூலம், குற்றவியல் சட்டமூலம், பிரதம நீதி அரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இப்படி அநீதியான சட்டமூலங்களுக்கெல்லாம் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அரசு ஹக்கீமை நம்பத்தயாரில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் .அத்துடன் ஜனாதிபதி மஹிந்தவை யுத்தக் குற்றவாழியாக்க ஹக்கீம் ஒருபோதும் விடமாட்டாராம் என்று அண்மையில் சூளுரைத்திருந்தார்.
மஹிந்தரின் கோரிக்கையை உதாசீனப்படுத்திய ஹக்கீம்
கடந்த 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேற்பாளராக நியமிக்க பட்டபோது மஹிந்த ராஜபக்ச ஹக்கீமிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தான் உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் எங்கு எப்போது வரவேண்டும் என்று மஹிந்தர் ஹக்கீமிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த ஹக்கீம் எனக்கு இப்போது அதற்கு நேரமில்லை என்று மஹிந்தரின் தொலைபேசி அழைப்பையும் அவரது கோரிக்கையையும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்திவிட்டார் என்றுதான் பார்க்கப்பட்டது.
மற்றும் கடந்த 2005ம் ஆண்டு தேர்தல், கடந்த 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் மற்றும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்  2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முட்டிமோதி சூளுரைத்தார்.
ஹக்கீமின் செயலால் முழு முஸ்லிம்களும் பாதிப்பு
ஹக்கீம் அன்று முழு முஸ்லிம்களையும் நிறைவேற்று ஜனாதிபதியுடன் முட்டிமோதும் நிலையை உருவாக்கினார். ஜனாதிபதியுடன் ஒட்டிக் கொண்டுள்ள இனவாத கட்சிகளும், இனவாதிகளும் முஸ்லிம்கள் எம்மை ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்கினார்கள். அன்று உருவானது தான் பொதுப்பல சேனா என்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்பு.
இந்த அமைப்பு உருவாவதற்கு காரணமாக அமைந்தது. ஹக்கீமின் தேர்தல் பிரச்சார முழக்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன்தான் இந்த அமைப்பு இயங்குகின்றது. அதே போன்று கடந்த சந்திரிக்கா ஆட்சியின் போதுதான் ஹெல உறுமய என்ற இனவாதக் கட்சி அரசின் ஆதரவுடன் அமைக்கப்பட்டு வந்தது. இப்படியாக காலகாலமாக அரசின் பின்புலத்துடன்தான் இனவாத கட்சிகளும் அமைப்புக்களும் இயங்கிவருகின்றது.
ஹக்கீமின் உசுப்பேற்றும் உரைகள்
ஹக்கீம் வீராதி வீரன், சூராதி சூரன் போன்று கிழக்கு முஸ்லிம்களை உசுப்பேற்றி மேடை மேடையாகப் பேசி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களை எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. இதன் தாக்கம்தான் இன்று நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.தே.க. கட்சிக்கு வாக்காளத்து வாங்கிக் கொண்டு இந்த அரசை போட்டுத் தாக்கி வந்தார். தற்போது அரசு பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது போனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்காது கோனால் முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும் என்று முஸ்லிம் வாலிபர்களை உசுப்பேற்றுகின்றார்.
 மு.கா உருவான பின்புதான் இனமுறுகல் அதிகளவு ஏற்பட்டது
தற்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தேவையே கிடையாது. இந்த கட்சியால் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்துக்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எவ்விதமான நன்மையுமில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் உருவான பின்புதான் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகளவு கிழக்கு மாகாணத்தில் மோதிக் கொண்டார்கள். கிழக்கு மகாணத்தில் முஸ்லிம்களும் பெருமளவு மோதிக் கொண்டதற்குப் பின்னால் முஸ்லிம் காங்கிரசின் பங்கு உள்ளது. இதுபற்றி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நன்கு சிந்தித்தால் நன்கு புரியும்.
அரசாங்கத்தை விமர்சித்த ஹக்கீம்
நாட்டில் ஜனநாயகமில்லை, குடும்ப ஆட்சி என்றும் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்போம், வீட்டிற்கு அனுப்புவோம் என்று 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போதும் சூளுரைத்த ஹக்கீம் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என்பது பெரும் தர்மசங்கடம்தான்.
அதனால்தான் அம்பாறை கரையோரக் கச்சேரி கேட்டு அதைப்பெற்றுக் கொண்டு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அரசில் இணைந்து கொண்டார்கள். ஆளுந்தரப்பில் இணையாமல் அரசியல் செய்யமுடியாத நிலை உள்ளதாக ஹக்கீம் அன்று தெரிவித்திருந்தார்.
ரணிலை ஜனாதிபதியாக்க ஆசைப்பட்ட ஹக்கீம்
ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு ஹக்கீம் முடிந்தவரை முயற்று பார்த்தார் முடியவில்லை. இறுதியாக எட்டி எட்டிப்பார்த்து முடியாமல் போகவே இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில்தான் அரசிடம் சரணாகதி அடைந்துள்ளார் ஹக்கீம்.
முஸ்லிம் காங்கிரஸ் மதிப்பும் இவ்வாறு மரியாதையும் இல்லாது புலம்பவேண்டிய நிலை தான் ஏற்படும் என்று கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஆட்சி அமைத்த பின்பு நாங்கள் பல ஆய்வுகளில் எழுதியிருக்கின்றோம். அரசில் ஹக்கீம் மதிப்பும் மரியாதையுமாக இருக்கின்றார் என்றால் ஹக்கீம் நாட்டில்லாத நேரத்தில் பஷீர் சேகுதாவுத்திற்கு முழு அமைச்சர் பதவி கொடுக்கமுடியுமா?
மஹிந்தவை நம்ப வைக்கத் துடிக்கும் ஹக்கீம்
என்ன பாதிப்பு வந்தாலும் ஜனாதிபதியை ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவேன் என்று ஜனாதிபதியிடம் ஹக்கீம் தெரிவித்துள்ளாராம். ஆக ஜனாதிபதி இன்னும் ஹக்கீமை நம்பவில்லை என்பது புலனாகின்றது.
என்ன பாதிப்பு என்றாலும் என்கின்ற போது முஸ்லிம்களின் உரிமைகளை பாதித்தாலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும் நான் ஜனாதிபதியுடன் தான் இருப்பேன், இருக்கின்றேன் என்று அடம்பிடித்து பார்க்கின்றார் ஹக்கீம்.
ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல்தான் மஹிந்தர் அமோக வெற்றியடைந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்பது அரசுக்கு தேவையே கிடையாது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்கின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தேவைப்படும். ஆனாலும் மிகவும் முக்கியமான தீர்மானங்களை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அரசு நிறைவேற்றிவிட்டது.
இனிமேல் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்தால் என்ன பிரிந்தால் என்ன என்ற நிலையில்தான் அரசு உள்ளது ஆனாலும் முஸ்லிம்களும் அரசுடன் இருக்கின்றார்கள் என்ற நோக்குடன் பஷீர் சேகுதாவுத்தை அரசு வளர்க்கப் பார்க்கின்றது.
உண்மையாக முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பஷீர் சேகுதாவுத்தை வளர்த்து அவருடன் இணைய வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் பஷீர் சேகுதாவுத்தை கட்டியெழுப்ப வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒருவருக்காக முட்டுக் கொடுப்பதும், வக்காளத்து வாங்குவதும், கூஜா தூக்குவதும், பல்லாக்குத் தூக்குவதும் மாற வேண்டும்.
மு.கா எந்த உரிமைக்காக போராடியுள்ளது
முஸ்லிம் காங்கிரஸ் உரிமைக் கட்சியாம் எந்த உரிமையை அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்துள்ளது. எந்த உரிமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளது. எந்த உரிமைக்காகவும் பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளதா?
முஸ்லிம்களின் உரிமை என்பது அரை அமைச்சும் முழு அமைச்சும்தானா. முஸ்லிம் காங்கிரசின் சுயநலத்திற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம்களும் அடிபட வேண்டிய இக்கட்டான நிலமைக்கு பொதுப்பலசேனா என்ற இனவாத அமைப்பு முயன்று வருகின்றது.
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் பயந்து, அஞ்சி நடுங்கி வாழ்ந்து வருகின்றார்கள்.
முஸ்லிம்களுக்கான தாக்குதல் தொடரும்
எந்த நிமிடத்தில் எங்கு என்ன நடக்குமோ என்ற நிலை உருவாகியுள்ளது. 1983 ஜுலைக் கலவரத்தை விட மிகவும் மோசமான கலவரம் நடக்குமோ என்று அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.
அனேகமாக ஊவா தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாரிய கலவரமொன்று கொழும்பில் நடக்கலாம் என்று எச்சரிக்கை செய்கின்றோம். பெருமளவு சேதங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படும் என்பதையும் எச்சரிக்கின்றோம்.
தப்லீக் ஜமாஆத் அமைப்பினர் பள்ளிவாசல்களில் மார்க்கக் கடமை செய்கின்ற போது குருணாகால பகுதிகளில் சிங்களவர்கள் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து விசாரனை நடாத்துகின்றார்கள். இப்படியாக முஸ்லிம்களின் உயிரிலும் மேலான மார்க்கத்திற்கும், மார்க்கக் கடமைக்கும், மார்க்கத் தளத்திற்கும் ஆபத்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தட்டிக் கேட்க நாதியில்லாத முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள். ஜடங்களாக, பேசாமடந்தைகளாக மௌனிப்பதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
நாட்டில் 30 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளது, தாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் 17 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. பல வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றது. பொதுப்பாலசேனா அமைப்பை அரசு இயக்குவதாகச் சொல்லப்படுகின்றது.
இவைகள் பற்றி ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றிய விடயமானது வரலாற்று முக்கியத்துவமிக்க உரையாகப் பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்காக ரணில், சம்பந்தன் வாதாட்டம்
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமயப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரையாற்றிய விடயமானது பாராட்டப்பட வேண்டும்.
இந்த உரையில் அரசியல் இலாபம் என்று எவர் சொன்னாலும் ஒரு பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும், இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியின் தலைவர் என்ற வகையிலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையிலும், இலங்கையின் ஒவ்வொரு முஸ்லிம் பிரஜையும் ஐ.தே.கட்சித் தலைவரையும் சம்மந்தனையும் பாராட்ட வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க, சம்மந்தன் ஆகியோர் ஆற்றிய உரையானது, அந்த உரையை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி நாங்கள்தான் என்று மார்தட்டும் ஹக்கீம் உரையாற்றி இருக்க வேண்டும். அதைவிட்டு நீங்களும் பேசாமல் பேசுகின்றவர்களையும் பேசவிடாது இடையூறு செய்த விடயம் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ரணிலை பேசவிடாது குறுக்கீடு செய்தவர்களை ஒதுக்க வேண்டும். ஓரங்கட்ட வேண்டும்.
முஸ்லிம்களின் உயிரிலும் மேலான மார்க்கமும், மார்க்கம் சம்மந்தப்பட்ட விடயத்தில் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி மௌனம் காக்கின்றார். அந்த மார்க்கக் கடமைகளுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற மாற்று இனத்தவரை இடையூறு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் மார்க்கமும், மார்க்க விடயமும் முஸ்லிம்களின் உரிமை இல்லையா?
இந்த நூற்றாண்டில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துள்ள ஐ.தே.கட்சியையும் அதன் தலைவரையும் இந்த நாட்டு சகல முஸ்லிம்களும் கட்சி பேதமின்றி வாக்களித்து வெல்லவைக்க வேண்டும். இது முஸ்லிம்களின் தார்மீக தலையாய கடமையாகும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் என்கின்ற போது ஹக்கீமைத் தவிர வேறு யாரும் இவைகள் பற்றி பேச முடியாது. காரணம் அவர்கள் எல்லோரும் அரசின் முள்ளுத்துண்டை பெற்றுக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகள்.
ஹக்கீமைத் தவிர மற்றவர்களையோ அல்லது அவர்களின் கட்சியையோ முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவும் இல்லை. ஆனால் ஹக்கீம்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று மார்தட்டி வருகின்றார்.
ஹக்கீம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் வாயே திறக்கவில்லை. அவர்தான் அரசின் ஏகபிரதிநி அல்லவா. எப்படித் திறக்க முடியும்.
பெரும்பான்மை இனத்தின் விமர்சனங்களுக்கும் அஞ்சாது, இனவாதிகளுக்கும் அஞ்சாது துணிந்து முஸ்லிம்களுக்காக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதானது வரலாற்று சிறப்புமிக்கது.
முஸ்லிம்களைச் சீண்டல்
நாடு முழுவதும் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே இனவாதிகள் சீண்டுகின்றார்கள் இஸ்லாத்தைப் பற்றி பெருமளவு நிந்திக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் குளியாப்பிட்டிய பகுதியில் பன்றியொன்றின் படத்தின் குறுக்கே அல்லாஹ் அக்பர் என்று எழுதி ஏந்திச் சென்று ஆர்பாட்டம் செய்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களும் ஊர்வலங்களும் நாடு முழுவதும் பரவி விசம் விதைக்கப்பட்டு வருகின்றது.
வடகிழக்கில் தமிழ் மக்களை அண்டி வாழும் முஸ்லிம்கள் தவிர ஏனைய முஸ்லிம்கள் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதிகள் என்று மார்தட்டும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளிடம் முறையிடக் கூட இல்லை.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடி உழைத்த முஸ்லிம் அமைச்சர்கள் தற்போது தங்களது சமூகத்திற்காக ஓடி உழைக்க முடியாது தங்களது அமைச்சர் பதவியைக் காப்பாற்றுவதற்காக மௌனம் காப்பது கேவலத்திலும் படுகேவலம். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவும் நடந்தும் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உரிமைக் கட்சி என்று நா கூசாமல் சொல்ல முடியுமா? அதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா.
முஸ்லிம்கள் பற்றிப் பேசாத மு.கா
கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏதாவது முஸ்லிம்கள் பற்றி பேசியதுண்டா, ஏதாவது செய்ததுண்டா. கட்சியை பாதுகாக்க என்ற பம்மாத்தில் கட்சியின் தலைமைப் பதவியைக் காப்பாற்றித்தான் இவ்வளவு காலமும் கட்சி நகர்ந்துள்ளது. முஸ்லிம்கள் பற்றியோ, கிழக்கு முஸ்லிம்களின் நலன்கள் பற்றியோ கட்சியின் ஒரு உறுப்பினராவது பேசியதுண்டா.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் எது செய்தாலும் கட்சியின் தொண்டன் பொறுத்துக் கொள்வான், சகித்துக் கொள்வான், கட்சியைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை ஹக்கீம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுதான் ஹக்கீமின் அசைக்க முடியாத பலம் என்பதை நாங்கள் எங்களது பல ஆய்வுகளில் எழுதியுள்ளோம். நாம் தொடர்ந்து எழுதி வந்த ஹக்கீமின் பலம் எது என்பதை ஹக்கீம் தனது வாயால் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பாராட்டுங்கள்.
ஆனால் நீண்ட காலம் ஹக்கீமின் இந்தப் பலம் நிலைத்திருக்காது இந்த பலம் உடையும் காலமும் உண்டு என்பதை ஹக்கீம் சிந்திக்க வேண்டும்.
மாற்று அணியொன்று உருவாகின்ற போது ஹக்கீம் வைத்துள்ள அசைக்க முடியாத பலம் உடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com

அரசை விட்டு வெளியேறுமாறு ஹக்கீமிடம் மீண்டும் ஜனாதிபதி உத்தரவு
ஹக்கீமிடம் அரசை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மீண்டும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக அரசின் உயர் மட்டச் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ஹக்கீமிடம் பல தடவைகள் பல சந்தர்ப்பங்களில் அரசை விட்டு வெளியேறுமாறு சொல்லி விட்டார். ஆனால் ஹக்கீம் அரசை விட்டு வெளியேறுவதாக இல்லை. அரசை விட்டு ஹக்கீம் வெளியேறமாட்டேன் என்று ஹக்கீம் அடம் பிடிக்கின்றார்.
கடந்த வாரமும் ஹக்கீமைப் பார்த்து ஜனாதிபதி நாம் வெளியாக்குவதற்கு முன்னர் தானாக ஹக்கீம் வெளியாக வேண்டும் என்று ஜனாதிபதி கடிந்துள்ளார். அமைச்சர் என்ற பந்தாவில் பந்தோபஸ்துடன் வலம் வரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவ்வளவு சுலபமாக அமைச்சர் பதவியை விடுவாரா? இது நடக்குமா?அ
ப்படி நடந்தால் அதுவொரு உலக அதிசயம். அரசுக்கு எதிராக பல வகையான சம்பவங்களை ஹக்கீம் சர்வதேசத்திடம் முறையிடுகின்றார் என்ற குற்றச் சாட்டின் பெயரில்தான் ஜனாதிபதி கடிந்துள்ளதாக அறியப்படுகின்றது.
ஹக்கீம் விடயத்தில் அரசு உறுதியாக உள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். ஹக்கீம் இந்த அரசோடு தானாக விரும்பிச் சேரவில்லை அதாவது அழைத்துவரவில்லை. இழுந்து வந்துள்ளார். அதனால் ஹக்கீமை நம்பத் தயாரில்லை என்பதும் ஹக்கீம் மீது அரசும் துளியளவும் நம்பவில்லை என்பதுதான் யதார்த்தம்.

ad

ad