புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

யாழில் ஊடக வியலாளர்களை சலவை செய்யும் அஸ்வர் 
 வடக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசு சந்தேகம் கொண்டுள்ளதாக அரச அமைச்சர் ஹெகலிய அண்மையில் கருத்து தெரிவித்திருக்க அந்த
ஊடகவியலாளர்களிற்கு கற்பிப்பிப்பதற்கு நேரடியாகவே களமிறங்கியுள்ளார் மற்றொரு அமைச்சரான அஸ்வர்.
அத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவர் மஹிந்த என்று பான்கீமூன் தம்மிடம் கூறினாரெனவும் ஊடகவியலாளர்களிடம் அஸ்வர் தெரிவித்திருக்கிறார்.

யாழ்.மாவட்ட செயலகத்தினல் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி நெறி எனும்  பெயரில் இன்று (11.08.14) பட்டறையொன்று நடத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறுவதே இப்பயிற்சி பட்டறையின் நோக்கமாகும். தமிழ் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி பட்டறைகளை தடுத்து வரும் அரசு மறுபுறத்தே இத்தகைய மூளை சலவை கருத்தரங்குகளை அண்மைக்காலமாக நடத்தி வருகின்றது.

இத்தகைய கருத்தரங்கொன்றில் இன்று (11.08.14) கலந்து கொண்ட அமைச்சர் அஸ்வர் அரசினது சாதனைகள் தொடர்பான கையேட்டு நூலொன்றினை விடுதலைப்புலிகளது முன்னாள் ஊடக இணைப்பாளரும் தற்போதைய அரச ஆதரவு ஊடகமொன்றின் பணியாளருமான தயா மாஸ்டரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

அரசினது அபிவிருத்திகளை தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் இருட்டடிப்பு செய்வதாக அஸ்வர் அப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் இதே போன்று நடத்தப்பட்ட பயிலமர்வொன்றில் படையினருக்கு அஞ்சலி செலுத்த ஊடகவியலாளர்களை நிர்ப்பந்தித்தமை சர்ச்சைகளை தோற்றுவி;த்திருந்தமை தெரிந்ததே.

ad

ad