புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

மக்களவையில் முதல்முறையாக அரங்கேறிய தமிழ் வார்த்தைகள்

மக்களவையில் கேள்வி நேரத்தில், முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.
அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் சிவகாசியில் பட்டாசு
தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியதோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வினவியுள்ளார்.
அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளிக்க சபாநாயகர் அனுமதியை கோரியுள்ளார்.
சபாநாயகர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் தமிழில், புரட்சித் தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தமிழில் பேசியதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பூர்விகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad