புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் – மொரிசன் 
news
நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
 
பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்ட இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேர் கடந்த மாதம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டார்கள்.
 
ஒரு மாத காலம் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குழுவினரை அரசாங்கம் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றி, அங்கிருந்து நவுரு தீவிற்கு அழைத்துச் சென்றது.
 
புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் நோக்கில், இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச வைக்க குடிவரவு அமைச்சு முனைந்தது. ஆனால், அந்தக் குழுவினர் இந்தியர்களை சந்திக்க மறுத்து விட்டார்கள்.
 
இந்த சமயத்தில், தமக்குரிய தெரிவுகள் பற்றி பேசுவதற்கு சட்டத்தரணிகளை சந்திக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லையென அவர்கள் சார்பில் வழக்குத் தொடுத்த ஜோர்ஜ் நிவ்ஹவுஸ் குற்றஞ்சாட்டினார்.
 
இன்று காலை ஏபிசி நிகழ்ச்சியின் ஊடாக கருத்து வெளியிட்ட அமைச்சர் ஸ்கொட் மொரிசன், சட்டத்தரணி நிவ்ஹவுசின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
 
புகலிடக் கோரிக்கையாளர் குழுவின் தலைவர்கள் கடந்த 29ஆம் திகதி சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.
 
இந்தக் குழுவிலுள்ள நபர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்து வந்தவர்கள் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
- See 

ad

ad