இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
நோ பயர் ஸோன் உட்பட்ட இலங்கையின் போர் தொடர்பான விவரண படங்களை தயாரித்த கெலும் மக்ரே, இறுதிப்போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமையை காட்டியிருந்தார்.
இந்தநிலையில் விசாரணைக் குழுவுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக செவ்வியளித்த அவர், தாம் விசாரணைக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.