இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக் குழு லண்டனில் கூடவுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அடுத்த வாரம் லண்டனில் கூடவுள்ளது.
விசாரணைகளை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுடன் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக்குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழுவிற்கு சவால் விடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சர்வதேச நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.